திருமணங்கள் தங்குவிடுதியிலும் நிச்சயிக்கப்படலாம்

காக்கி புக்­கிட் வட்­டா­ரத்து தங்­கு­வி­டுதி ஒன்­றில் வசிக்­கும் ஸ்ரீராம் பிர­கா‌ஷ், ஒரு­நாள் காலை எழுந்­த­போது பக்­கத்து அறை­யில் தங்­கி­ இ­ருந்த பங்­ளா­தே­‌ஷி­யர் முஜி­புர் ரகு­மான், புத்­தா­டை­களை அணிந்து தயா­ரா­வ­தைப் பார்த்­தார்.

எதற்கு இந்த ஆடை அலங்­கா­ரம் என்று முஜி­பு­ரி­டம் வின­விய ஸ்ரீரா­மிற்கு, அதிர்ச்­சி­யும் ஆச்­சரி­ய­மும் காத்­தி­ருந்­தது. முஜி­புர் ரகு­மா­னுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 11 மணிக்­குத் திரு­ம­ணம். அது­வும் தங்­கு­வி­டு­தி­யில் இருந்­த­வாறே திரு­ம­ணம். மணப்­பெண் பங்­க­ளா­தே­‌ஷில் உள்­ளார். 'ஸூம்' தளம் வழி நண்­பர்­களும் குடி­யி­ருப்­பாளர்­கள் சில­ரும் சூழ நிக்­காஹ் செய்து­கொண்­டார் முஜி­புர்.

அவ­ரின் திரு­ம­ணம் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் தள்­ளிப்­போ­னது. அவ­ரின் பெற்­றோ­ரும் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த கார­ணத்­தால் திரு­ம­ணத்தை நடத்­தி­வி­ட­வேண்­டும் என்று முடி­வெ­டுத்­த­னர்.

நிச்­ச­யம் செய்து பல காலம் ஆன நிலை­யில் பெண் வீட்­டா­ரின் நெருக்­கு­த­லுக்­கும் ஆளா­கி­னர் மாப்­பிள்ளை வீட்­டார். தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­க­ளைக் கருத்­தில் கொண்டு இங்­கி­ருந்­த­ப­டியே பங்­­ளா­தே­‌ஷின் முன்­‌ஷி­கஞ் மாந­க­ரில் இருக்­கும் பெண்ணை மணந்­து­கொண்­டார் முஜி­புர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­டுத்­திய சஞ்­ச­லங்­கள் எண்­ணி­ல­டங்கா.

"எங்­க­ளால் எங்­குமே செல்ல முடி­யா­தது மிகப்­பெ­ரிய இடை­யூறாக இருக்­கிறது. தேக்­கா­விற்­குச் சென்று மற்­ற­வர்­க­ளைச் சந்­தித்­துப் பொருட்­கள் வாங்கி வரு­வ­தில் கிடைக்­கும் இன்­பம் இப்­போது இல்­லா­மல் போய்­விட்­டது," என்று கூறி­னார் ஸ்ரீராம், 35.

அவர் எட்டு ஆண்­டு­க­ளாக இங்கு மின்­சா­ரத் துறை சார்ந்த நிறு­வ­னம் ஒன்­றில் பணி­பு­ரி­கி­றார்.

தமிழ்­நாட்­டின் தஞ்­சா­வூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த அவர், மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­னர் குடும்­பத்­தி­ன­ரைப் பார்த்­து­விட்டு சிங்­கப்­பூர் திரும்­பி­னார்.

அவ­ரது முதல் குழந்தை பிறந்­த­போ­து­கூட அவர் அங்கு இல்லை. தன் மகனை இது­வரை திறன்­பேசி­யில் வாட்ஸ்­அப் காணொளி அழைப்பு மூலமே பார்த்­து­வ­ரும் அவர், தம் கையில் மக­னைத் தூக்­கிக் கொஞ்ச ஏங்­கு­கி­றார்.

"வெளியே சென்று என் பிள்­ளைக்கு ஆடை­க­ளையோ விளை­யாட்­டுப் பொருட்­க­ளையோ வாங்கி இந்­தி­யா­விற்கு அனுப்­பு­வ­தற்­குக்­கூட என்­னால் முடி­ய­வில்லை. அந்த அள­விற்கு முடங்­கிக் கிடக்­க­வேண்­டி­யுள்­ளது. கட்­டுக்­குள் கொரோனா இருக்­கும் நேரத்­திலாவது எங்­களை வெளியே செல்ல அனு­ம­திக்­க­லாம் அல்­லவா," என்று சொன்ன அவர், முன்­னோட்­டத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­ட­தில் மகிழ்ச்சி கொண்­டார்.

"இருப்­பி­னும் நாங்­கள் லட்­சக்­கணக்­கில் இருக்­கி­றோம். வெறும் 500 பேர் மட்­டும்­தான் போக முடி­யும் என்­கின்­ற­னர். இந்­தத் திட்­டத்­தின்­படி எப்­போது எனக்கு வாய்ப்பு கிடைக்­கும் என்று தெரி­ய­வில்லை," என்­கி­றார் அவர்.

இது­போன்ற நேரத்­தில் முஜி­பு­ரின் திரு­ம­ணம் பக்­கத்து அறை­யில் நடந்­தது தமக்கு மிகுந்த மகிழ்ச்­சி­யைத் தந்­த­தா­க­வும் தம் சொந்த ஊரில், தம் வீட்­டில் இருந்­தது போன்ற உணர்­வைத் தந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

முஜி­புர் ரகு­மான் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் சாயம் பூசும் பணி­யைச் செய்­ப­வர். மாதம் $1,300 சம்­ப­ளம் வாங்­கும் அவர், செல­வு­கள் போக 400 வெள்­ளியை வீட்­டிற்கு அனுப்­பு­கி­றார்.

"முத­லாளி எங்­க­ளுக்கு என்­ன­தான் சலுகை வழங்­கி­னா­லும், அர­சாங்க விதி­மு­றை­க­ளால் எங்­குமே எங்­க­ளால் போக­மு­டி­ய­வில்­லையே! இச்­சூ­ழ­லி­லும் திரு­ம­ணம் நடந்­த­தில் மகிழ்ச்சி.

"என் நாட்­டைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த முறை­யி­லேயே திரு­மணம் செய்­துள்­ள­னர். உறு­தி­மொழி எடுத்­தால் திரு­ம­ண­மா­ன­தாக பொருள்­ப­டு­வ­தால் எங்­க­ளால் இப்­படி வேறோர் இடத்­தில் இருந்­த­வாறு திரு­ம­ணம் செய்­து­கொள்ள முடி­கிறது," என்­றார் முஜி­புர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!