குடும்பங்களில் பரவிய கொண்டாட்ட உணர்வு

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

மன­த­ள­வி­லும் பொரு­ளா­தார ரீதி­யி­லும் பாதிப்பு.

எப்­போது கொவிட்-19 நில­வ­ரம் மேம்­படும் என்ற கவ­லை­யு­டன் அன்றாட சவால்­களைச் சமா­ளித்­த­வாறு வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கும் வசதி குறைந்த குடும்­பங்­கள்.

இவர்­கள், பண்­டிகைக் காலத்­தி­லா­வது கவ­லை­களை மறந்து, மகிழ்ச்­சி­யாகக் கொண்­டாட உதவி செய்­கிறது ஒரு தொண்­டூ­ழி­யக் குழு.

'இத­யங்­க­ளுக்கு ஒளி­யூட்­டு­தல், இல்­லங்­க­ளுக்கு ஒளி­யூட்­டு­தல்' என்ற திட்­டத்­தின் கீழ் செயல்­படும் தொண்­டூ­ழி­யர்­கள் கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக தீபா­வளி அன்­ப­ளிப்புப் பைகளை வழங்கி ெகாண் டாட்ட உணர்வைப் பெருக்கி வரு கின்றனர். 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை­யில் 2,400க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் உத­வி­யு­டன் 6,900க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு மளி­கைப் பொருட்­கள், தீபா­வளிப் பல­கா­ரங்­களுடன் அண்­மைய ஆண்டு­ களில் 'அங் பாவ்' ரொக்க உறையும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இக்­கா­லக்­கட்­டத்­தில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட நன்­கொடை தொகையை இந்­தக் குழு­வி­னர் தங்­க­ளு­டைய அறப்­ப­ணிக்­காக திரட்­டி­யுள்­ள­னர்.

இத்­திட்­டத்­தின்­படி, வழக்­க­மாக தொண்­டூ­ழி­யர்­கள் அன்­ப­ளிப்­புப் பைககளை பொருட்­களுடன் நிரப்ப, வாக­னம் ஓட்­டும் மற்ற தொண்­டூழி­யர்­கள் அவற்றை நேர­டி­யாக இல்­லங்­க­ளுக்கு கொண்டு போய்ச் சேர்ப்­பது வழக்­கம்.

ஆனால் இம்­முறை கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் சிறு மாற்­றம் செய்­யப்­பட்­டது.

அன்­ப­ளிப்புப் பைகளை தீபா­வ­ளிக்கு சில நாட்­கள் முன்­ன­தா­கவே ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் தீவி­லுள்ள வெவ்­வேறு குடும்ப சேவை நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பி­விட்­ட­னர்.

அந்­நி­லை­யங்­கள் அவை சேவை­யாற்­றும் குடும்­பங்­க­ளுக்கு அவற்றை விநி­யோ­கம் செய்ய உத­வின.

இத்­திட்­டத்­தின் செயல்­மு­றை­ யி­லும் தொண்­டூ­ழிய நிர்­வா­கத்­தி­லும் பங்­க­ளித்து வரு­ப­வர் 31 வயது திரு கணே­சன்.

இவ்­வாண்டு அதி­கம் பாதிக்­கப் ­பட்ட ஓரறை முதல் மூவறை வீடு­களில் வசிக்­கும் குடும்­பத்­தி­னரை அன்­ப­ளிப்­பு­கள் சென்­ற­டைய வேண்­டும் என்று ஏற்­பாட்­டுக் குழு முடிவு செய்­த­தா­க­வும் கடந்த சில ஆண்டு­ க­ளா­கவே இதர சமூக அமைப்­பு­களும் தனி நபர்­களும் பண்­டிகை காலத்­தில் இது­போன்ற அறப்­ப­ணி­யில் ஈடு­பட்டு வரு­வது வர­வேற்­கத் ­தக்­கது என்­றும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டுக் குழு­வில் இடம்­பெற்­றுள்ள திரு கணே­சன் தெரி­வித்­தார்.

இத்­திட்­டம் அறி­மு­க­மா­ன­தி­ல்­இருந்து அதற்கு முக்­கிய பங்­காற்றி வரும் 27 வயது சுகா­தார ஆலோ­ச­கர் குமாரி அ. விக்­னேஸ்­வரி, 'பெயர் எழு­தப்­பட்ட ஒட்­டு­வில்லை', 'காகி­தப் பை', மெழுகு விளக்­கு­கள் போன்ற பொருட்­களை பொது மக்­க­ளி­ட­மி­ருந்து நன்­கொ­டை­யாக பெற சமூக ஊட­கங்­கள் பேரு­த­வி­யாக இருந்­த­தா­கச் சொன்னார்.

குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஒவ்­வொரு அன்­ப­ளிப்புப் பையி­லும் $100 மதிப்­புள்ள 'அங் ­பாவ்' உறை, $30 மதிப்­புள்ள 'ஷெங் சியோங்' பேரங்­கா­டி­யின் பற்­றுச்­சீட்டு, முறுக்கு, குக்­கீஸ், மெழுகு விளக்கு­ கள் போன்றவை வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

முறை­யாக இயங்­கும் இந்த அறப்­ப­ணிக் குழுவின் முயற்சி களுக்கு ஒட்­டு ­மொத்த சமூ­க­மும் ஊக்கமூட்­டு­வ­தா­கக் கூறிய சொத்து முக­வரான திரு­மதி சி. இந்­தி­ராணி, 41, சில ஆண்­டு­ களுக்கு முன்பு தன்­னை­யும் இணைத்துக் கொண்டு அன்­ப­ளிப்பு பைகளை விநியோகம் செய்ய ஆரம்பித்தார். இம்­முறை, 700 காகி­தப் பைகளை நன்­கொ­டை­யாக வழங்­கிய திரு­மதி இந்­தி­ராணி, இது­போன்ற சமூக முயற்­சி­களில் தொடர்ந்து ஈடு­பட ஆர்வம் காட்டி வரு­கி­றார்.

உதா­ர­ணத்­திற்கு, இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் கீழ் இயங்­கும் 'ஆ‌‌‌ஷ்­ரம்' மறு­வாழ்வு இல்­லத்­தின் 'நெஞ்­சார்ந்த அன்­ப­ளிப்பு' திட்­டத்­தின் கீழ், வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு ஒவ்­வொரு மாத­மும் இவர் மளி­கைப் பொருட்­களை விநி­யோ­கம் செய்­வ­தில் உதவி வரு­கி­றார்.

'தாறு­மாறு ரன்­னர்ஸ்' எனும் பொழு­து­போக்கு ஓட்­டக்­குழு சுமார் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு இத்­திட்­டத்­திற்கு கைெகாடுத்­த­போது அதன் உறுப்­பி­ன­ரான டாக்­டர் மைதிலி பாண்­டி­யும் தீவி­ர­மாக தன்னை அறப்பணியில் இணைத்துக் கொண்டார்.

அதி­லி­ருந்து ஒவ்­வோர் ஆண்­டும் இம்­மு­யற்­சிக்கு நன்­கொடை வழங்கி வரும் இவர், அதற்கு மேலாக அன்­ப­ளிப்புப் பைகளில் கொடுக்­கப்­படும் 'குக்­கீஸ்' வகை ­­களை தயாரித்து பொட்­ட­லம் கட்ட வும் உதவி வரு­கி­றார்.

இம்­முறை 10 போத்­தல்­களை நிரப்­பக்கூடிய 'சாக்­ெலட்­சிப்' குக்­கீஸ் வகையை பொட்­ட­ல­மாக மடிப்­ ப­தில் தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் அவ­ரது மூன்று பிள்­ளை­க­ளை­யும் டாக்­டர் மைதிலி ஈடு­ப­டுத்­தி­னார். டாக்­டர் மைதி­லியைச் சேர்த்து மொத்­தம் 70 தொண்­டூ­ழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்­த­வாறு குக்­கிஸ்­களை பொட்­ட­லம் கட்ட உத­வி­னர்.

"பிள்­ளை­களை இது­போன்ற தொண்­டூ­ழி­யங்­களில் ஈடு­ப­டுத்­தும்­போது வெளி­யு­ல­கத்­தில் என்ன நடக்­கிறது என்­பதை அவர்கள் உணர்­கின்­ற­னர். எதிர்­கா­லத்­தில் தொண்­டூ­ழி­யம் புரி­வது அவர்­ களுக்கு இயல்­பா­கி­வி­டு­கிறது," என்று கூறி­னார் குடும்ப நல மருத்­து­வ­ரான டாக்­டர் மைதிலி, 40.

"அனை­வ­ருக்­கும் ஒரு நல்ல பண்­டிகை கொண்­டாட்ட அனு­ப­வம் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில்­தான் இவ்­வாண்­டுத் திட்­டத்­தில் சேர்ந்­தேன்.

"சமூ­கத்­தில் பின்­தங்­கி­யுள்­ள­வர் ­க­ளை­ மறந்துவிடாமல் அவர்களுக் குள் பண்டிகை உணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் காணும் போது நமக்கும் மனநிறைவு ஏற்படு கிறது," என்­றார் திட்ட ஏற்­பாட்­டுக் குழு­வில் இடம்­பெற்­றுள்ள அர­சாங்க ஊழி­ய­ரான 23 வயது குமாரி அ‌ஹல்யா ஜனார்த்­த­னன்.

கிட்டத்தட்ட 700 குடும்பங் களுக்கு ஒளியூட்டும் விதமாக இம்முயற்சி நடந்தேறியது.

மொத்தம் $80,000க்கும் மேற்பட்ட நன்கொடை இம்முயற்சிக்காக திரட்டப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!