விரும்பிய பாதையில் வெற்றி நடைபோடும் வித்யா

"நீ திரு­ம­ணம் செய்­து­கொள்­ள­வேண்­டும். உன் குழந்­தை­களை வளர்த்து ஆளாக்க வேண்­டும். ஒரு பெண்­ணுக்கு இதெல்­லாம் மிக­வும் சிர­மம்."

இவை ராஜ் ஃபுட்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் இணை நிறு­வ­னர் மற்­றும் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை­யின் இளம் தொழில் முனை­வர் விருதை வென்ற குமாரி வித்யா க. நாக­ரா­ஜ­னி­டம் அவ­ரது தாயார் கூறிய வார்த்­தை­கள்.

36 ஆண்­டு­க­ளுக்கு மேலாக தமது தந்தை நடத்தி வந்த மசாலா கலவை தயா­ரிக்­கும் தொழிற்­

சா­லை­யின் இணை இயக்­கு­நராக 2013ஆம் ஆண்­டில் பொறுப்­பேற்று நிர்­வாக வேலை­க­ளைக் கவ­னித்து வரு­கி­றார் குமாரி வித்யா.

பெண் ஒரு­வர் மசாலா கலவைத் தொழிற்­சா­லையை ஏற்று நடத்­து­வது அரிது. எனவே, இந்­த வர்த்­த­கத்­தில் காலடி எடுத்து வைத்த குமாரி வித்­யாவைப் பலர் ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்த்­த­னர்.

கணக்­கி­யல் மற்­றும் நிதி சார்ந்த துறை­யில் பணி­யாற்­றிய இவ­ருக்குத் தொழிற்­சாலை தொடர்­பான பணி­கள், ஊழி­யர்­களை நிர்­வ­கிப்­பது போன்­றவை புதிய அனு­ப­வ­மாக இருந்­தன.

"தொடக்­கத்­தில் தொழிற்­

சா­லைக்கு வந்த முதிய வாடிக்­கை­யா­ளர்­கள் அனை­வ­ரும் என்னைப் பார்த்­து­விட்டு அதிர்ந்­த­னர்.

"இளம் பெண்­ணான என்­னி­டம் எப்­படி வர்த்­த­கம் குறித்து பேசு­வது என்று எனது தந்­தை­யி­டம் கேள்வி எழுப்­பி­னர்," என்று ஆரம்­பத்­தில் தாம் சந்­தித்த சவால்­களை குமாரி வித்யா நினைவுகூர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பிர­ப­ல­மான நான்கு மசாலா கலவை வர்த்­த­கங்களில் இவ­ர­தும் ஒன்று.

தந்­தை­யி­ட­மி­ருந்து பொறுப்­பேற்­ற­பின், தொழில்­நுட்ப ரீதி­யா­க­வும் வாடிக்­கை­யா­ளர்­களின் தேவை களைப் பூர்த்தி செய்­யும் விதத்­

தி­லும் பல்­வகை மாற்­றங்­களை அறிமுகப்படுத்தி தந்­தையைப்

பெரு­மை­ய­டையச் செய்­தி­ருக்­கி­றார் குமாரி வித்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!