புகைப்படக் கலையில் தனித்துவம் நாடும் ஹம்சவள்ளி

ஒரு­முறை, திரு­மண விழா

ஒன்­றில் புகைப்­ப­டக் கலை­ஞ­ரா­கப் பணி­யாற்­றிக்கொண்­

டி­ருந்­த­போது மணமகள் அரு­கில் கேமராவுடன் நின்­று­கொண்­டி­ருந்த ஹம்­ச­வள்ளி துரை­ராஜு­வைப் (படம்) பார்த்து அங்­கி­ருந்த ஒரு­வர், "நீங்­கள் மண

மக­ளுக்கு ஒப்­பனை செய்ய வந்த ஒப்­ப­னைக் கலை­ஞரா?" என்று கேட்­டது இன்­றும் ஹம்­ச­ வள்­ளிக்கு நினை­வி­ருக்­கிறது.

புகைப்­ப­டத் தொழி­லில் ஆண்­கள் ஆதிக்­கம் செலுத்­து­வ­தால் அதில் பெண்­கள் பெரி­ய­ள­வில் முன்­னே­று­வது சவா­லான ஒன்­றா­கத் தெரி­ய­லாம் என்று கூறிய ஹம்­ச­வள்ளி, ஒரு முழு­நே­ரப் புகைப்­

ப­டக் கலை­ஞ­ரா­கத் தனக்­கென தனி அடை­யா­ளத்தை ஏற்

படுத்­திக்கொள்­வ­தி­லும் பல சவால்­க­ளைச் சந்­தித்­தார்.

13 வய­தி­லி­ருந்தே புகைப் படக் கலை­யில் ஆர்­வம் செலுத்தி வரும் ஹம்­ச­வள்­ளிக்­குத் தற்­போது 26 வய­தா­கிறது.

கடந்த இரண்டு ஆண்­டு

­க­ளாகச் சொந்த தொழில் அடிப்­ப­டை­யில் முழு­நேரப் புகைப்­படக் கலை­ஞ­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

திரு­ம­ணம், பிறந்­த­நாள் போன்ற விழாக்­க­ளில் புகைப்­

ப­டங்­கள் எடுப்­பது மட்­டு­மல்லாது, இவ­ரது மற்ற படைப்பு­ கள் புகைப்­படங்­க­ளின் வழி காட்­சி­களை உரு­வாக்கி அதன் மூலம் கதை­சொல்­லும் தனித்­து­வம் கொண்­டவை. இவ­ரின் புகைப்­படங்கள் யாவும் பெண்­களை மைய­மாகக் கொண்­டவை.

அன்­னை­யர் தினத்தை முன்­னிட்டு ஒற்­றைத்­ தாய்­மார்­க­ளுக் ­காக இவர் சமர்ப்­பித்த புகைப்­படத் தொடர், மனிதர்களின் செயல்­க­ளால் கடல் உயி­ரி னங்­கள் படும் வேத­னையைச் சித்­திரித்த புகைப்­படத் தொடர் எனப் பல அர்த்­தங்­கள் நிறைந்த படைப்­பு­களை உரு­வாக்கி வரு­கி­றார். புகைப்­படக் கலை­யில் கால் எடுத்து வைப்­ப­தற்கு முன்பு வங்­கி­ ஒன்றில் ஹம்சவள்ளி பணி­யாற்றினார்.

புகைப்­படக் கலை மீதான வேட்கை அவரை அதன்

பக்­கம் இழுத்­தது. மற்ற முழு­நேர அலு­வ­லக வேலை­கள் போல் இது நிலை­யான மாதச் சம்­ப­ளம் தரா­விட்­டா­லும் தமக்குப் பிடித்த ஒரு தொழிலை சுய­மாக செய்து வரு­வது மன நிறைவை அளிப்­ப­தாக கூறு­கி­றார் ஹம்சவள்ளி.

"பிறர் கூறும் கருத்துகள் உங்­கள் குறிக்­கோள்­க­ளுக்­கும் கன­வு­

க­ளுக்­கும் இடை­யூ­றாக இருக்­கக்­கூ­டாது. நீங்­கள் என்ன செய்ய வேண்­டும் அல்­லது செய்­யக்­கூ­டாது என்று பலர்

கருத்­து­ தெரிவிப்பர். ஆனால் இது உங்­கள் வாழ்க்கை.

"உங்­க­ளுக்கு மனநிறைவைத் தரு­வ­தில் கவ­னம் செலுத்­துங்­கள். அதில் முன்­னேற்­றம் காண முயற்­சி­ செய்யுங்கள்," என்றார் ஹம்சவள்ளி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!