தந்தையின் உன்னத வழியில் பிரதமர் லீ

தந்தையின் உன்னத வழியில் பிரதமர் லீ

1 mins read
742c3668-e603-45d0-a75f-713b7c526cfe
டெயி உயர்நிலைப்பள்ளி மாணவருடன் இணைந்து மரக்கன்றை நட்ட பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரு­டாந்­திர மரம் நடும் தினத்தை முன்­னிட்டு பிர­த­மர் லீ சியன் லூங் மரக்­கன்று ஒன்றை நேற்று நட்­டார்.

இதில் சிறப்பு என்­ன­வென்­றால் 1963ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் திரு லீ குவான் இயூ நட்ட அதே வகை மரக்­கன்றை அவ­ரது மக­னான

பிர­த­மர் லீ நேற்று நட்­டுள்ளார்.

அங் மோ கியோ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­

பி­னர்­க­ளான திரு டேரல் டேவிட், திரு கான் தியோம் போ, திரு­வாட்டி இங் லிங் லிங் ஆகி­யோ­ரு­டன் இணைந்து திரு லீ ஒன்பது மெம்­பாட் மரங்­களை நட்டார். இவ்­வகை மரங்­களில் எழில்­மிகு இளஞ்­சி­வப்பு மலர்­கள் பூக்­கும்.

மரக்­கன்று நடும் நிகழ்­வில் கெபுன் பாரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹென்றி குவேக்­கும் இயோ சூ காங் நாடா­ளு­மன்ற உறுப்­

பி­னர் யிப் ஹோன் வெங்­கும் ஈடு­பட்­ட­னர்.

இந்த நிகழ்வு அங் மோ கியோ அவென்யூ 3ல் நேற்று நடை­பெற்­றது.