சிறுவர் படையின் அறப்பணி 44,000 பேருக்கு உதவியுள்ளது

திரு­வாட்டி கிருஷ்­ண­வேணி தெரசா போஸும் அவ­ரது இரண்டு குழந்­தை­களும் கடந்த ஏழு மாதங்­க­ளாக நிம்­ம­தி­யாக தூங்­க­வில்லை. ஏனெ­னில், அவர்­க­ளது ஓர் அறை வாடகை வீட்­டில் இருந்த ஒரே மின்­வி­சிறி பழு­த­டைந்து விட்­டது.

குழந்­தைப் பரா­ம­ரிப்பு ஆசி­ரி­ய­ரா­க­வும் குடும்­பத்­தின் ஒரே ஆதா­ர­மா­க­வும் இருக்­கி­றார் அந்த 46 வயது தாயார். ஐந்து மற்­றும் ஏழு வய­து­டைய இரண்டு மகன்­களும் வீட்­டில் வச­தி­யாக ஓய்­வெ­டுக்க ஒரு புதிய மின்­வி­சி­றிக்­காக ஏங்­கி­னார்.

"எனது குழந்­தை­கள் என்­னி­டம் புதிய மின்­வி­சி­றி­யைக் கேட்­ட­னர், ஏனென்­றால் அவர்­கள் வீட்­டில் வெப்­ப­மாக உள்­ளது என்­றும் தூங்க முடி­ய­வில்லை என்­றும் என்­னி­டம் சொன்­னார்­கள்," என்று திரு­வாட்டி தெரசா கூறி­னார்.

ஃபிலோஸ் சமூக சேவை­கள் அமைப்­பின் சமூக சேவ­கர்

ஒரு­வ­ரி­டம் தனது விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். அந்த அதி­காரி அதைச் சிறு­வர் படை­யி­டம் தெரி­வித்­தார். திரு­வாட்டி தெர­சா­வின் ஆசை விரை­வில் நிறை­வே­றும்.

இந்த ஆண்டு சிறு­வர் படை­யின் ஷேர்-எ-கிஃப்ட் திட்­டத்­தில் இருந்து பய­ன­டைந்த 44,167 பேரில் திரு­வாட்டி தெர­சா­வும் ஒரு­வர். இதுவே அதி­க­பட்ச பய­னா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யா­கும்.

கடந்த ஆண்டு, இத்­திட்­டத்­தில் 43,421 பய­னா­ளி­கள் இருந்­த­னர். அதற்கு முந்­தைய ஆண்டு 43,276 பேர் இருந்­த­னர். 34வது ஆண்­டாக நடை­பெ­றும் இந்த வரு­டாந்­திர அறப்­பணி நிகழ்ச்சி நேற்று ஹார்ட்­பீட்@ பிடோக்­கில் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்ட துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், "கொவிட்-19 தொடர்ந்து நம்மை எடை­போ­டு­கிறது, நாம் வாழும், வேலை செய்­யும், விளை­யா­டும் முறையை மேம்­ப­டுத்­து­கிறது. நமது நண்­பர்­கள் மற்­றும் அண்டை வீட்­டா­ரி­டையே ஆத­ரவு தேவைப்

­ப­டு­ப­வர்­கள் உள்­ள­னர். சமூ­கம் அவர்­க­ளின் தேவை­க­ளுக்கு உதவ முன்­வ­ரும்­போது, இது நிறைய அர்த்­த­முள்­ள­தாக இருக்­கும்," எனக் கூறினார். பெருந்தொற்­று­டன் வாழ்­வ­தில் சவால்­கள் இருந்­த­போ­தி­லும், அதன் நிதி திரட்­டும் முயற்­சி­களில் ஆர்­வத்­து­டன் இருப்­ப­தற்­கா­க­வும் தன்­னார்­வ­லர்­கள், பய­னா­ளி­க­ளின் நலனை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் அவர் சிறு­வர் படை­யைப் பாராட்­டி­னார். திரு ஹெங்­கும் ஆத­ரவு அமைப்புகளின் பிர­தி­நி­தி­களும் சிறு­வர் படை அறப்­ப­ணித் திட்­டத்­தின் அன்­ப­ளிப்­புப் பைகளில் பொருட்­களை வைத்­த­து­டன் அவற்­றைப் பய­னா­ளி­க­ளுக்­கும் கொடுத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!