வந்த இடத்தில் வாழக் கற்றுக்கொள்வதில் முதன்மை

திரு­ம­ணத்­துக்­குப் பின்பு சிங்­கப்­பூ­ரில் குடி­பெ­யர்ந்­த­னர் வீர­ம­கேந்­தி­ரன்-சுமதி தம்­ப­தி­யி­னர்.

முன்­பின் அறி­யாத புதிய நாட்டில் தங்­க­ளது வாழ்­வைத் துணை­யின்றி நிறுவ வேண்­டி­ய கட்­டா­யம் இவர்களுக்கு. நிதி வச­தி­யும் குறை­வாக இருந்த நிலை. அத்­த­கை­ய சூழ­லி­லும், ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உத­விக்­கொண்டு விட்­டுக்­கொ­டுத்­துப்­போக முயன்­ற­னர் இரு­வ­ரும்.

சேமிப்­பு­களே இல்­லா­மல், நெருக்­க­டி­யில் இருந்­த கார­ணத்­தி­னால் இரு­வ­ரும் வேலைக்­குச் செல்ல முடி­வெ­டுத்­த­னர்.

இருவரும் முழு­நே­ரப் பணி­யில் இருந்ததால், தங்­க­ளது மகளை கவ­னித்­துக்­கொள்­வது பற்றிய கவலை இவர்களைத் தொற்றி யது.

"வேறு வழி­யின்றி குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் பகு­தி­நே­ர­மாக மக­ளைச் சேர்க்­க­வேண்டி இருந்­தது. தொடக்­க­நிலை ஆறாம் வகுப்­பு­வரை அவள் அங்­கே­தான் இருந்­தாள். இன்­று­வரை அவளை அவ்­வாறு தனித்­து­விட்­டது என்னை உறுத்­து­கின்­றது," என்­றார் வாடிக்­கை­யா­ளர்க சேவைப் பிர­தி­நி­தி­யா­கப் பணி­பு­ரி­யும்

திரு­மதி மணி­யன் சுமதி, 38.

மனை­வி­யின் கருத்­தில் திரு வீர­ம­கேந்­தி­ர­னும் பங்­கு­கொண்­டி­ருந்­தார்.

நிதி நெருக்­க­டி­க­ளுக்கு இடை­யி­லும், முடிந்தவரை­ மனை­வி­யை­யும் மக­ளை­யும் கவ­னித்துக் கொள்ள அவர் பெரிதும் முயன்றார். வீட்­டு­வே­லை­க­ளைச் சம­மா­கப் பகிர்ந்­து­கொள்ள இரு­வ­ரும் தவ­றி­ய­தில்லை.

"எல்லா இடங்­க­ளி­லும் அமைதி காக்­கும் எனது சுபா­வத்தை அவர் விரும்­ப­வில்லை. எளி­தில் கோபப்­பட்டு, மனம் மாறா­மல் இருக்­கக்­கூ­டிய அவ­ரது போக்­கை­ நான் விரும்­ப­வில்லை.

"இருப்­பி­னும், சூழ­லுக்­கேற்ப ஒரு­வ­ரை­யொ­ரு­வர் புரிந்­து­கொண்டு விட்­டுக்­கொ­டுக்­க­வேண்­டும் என்பதை உணர்ந்­துள்­ளோம்," என்­றார் பாது­காப்பு ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­ன திரு பாரி­ஜா­தம் வீர­ம­கேந்­தி­ரன், 46.

வெவ்­வேறு வித­மா­ன குடும்­பச் சூழல்­களில் இரு­வ­ரும் வளர்ந்­த­த­னால், இரு­வ­ரது குணா­தி­ச­யங்­களும் வேறு­பட்டு இருந்­ததை அவர்­கள் உணர்ந்­த­னர்.

இருப்­பி­னும், அவ­ர­வர் சுய­நல எண்­ணங்­களை ஒதுக்கி வைத்­து ­விட்டு, குடும்ப அமைப்­பின் நல­னைக் கருதி தங்­க­ளைத் தாங்­களே மறு­ப­ரி­சீ­ல­னை செய்­து­கொண்­ட­னர். திரு­ம­ணத்­துக்கு நான்கு நாட்­க­ளுக்கு முன்­னரே ஒரு­வ­ரை­யொ­ரு­வர் கண்­டு­கொண்ட போதி­லும், தாங்­கள் எதிர்­நோக்­கி­யுள்ள இலட்­சி­யம்­வாய்ந்த பல்­லாண்­டு­கால வாழ்க்­கையை அது என்­றும் பாதிக்­காது என்­பது இவர்­க­ளது நிலைப்­பாடு.

ஒரு­வ­ரை­யொ­ரு­வரை மகிழ்­விக்­கும் நல்­ல சூழ­லைத் தின­மும் உரு­வாக்க முயல்­வ­தாக வீர­ம­கேந்­தி­ரன்-சுமதி தம்­ப­தி­யி­னர் பகிர்ந்து­ கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!