உழைப்பு, தொண்டூழியம் தந்த உயரிய கௌரவம்

சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய கல்வி விரு­தான அதி­பர் கல்­வி­மான் விருது கிட்­டத்­தட்ட அரை நூற்­றாண்டு காலம் கழித்து, உள்­ளூர் இந்­தி­யப் பெண் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

குழந்தை மருத்­து­வ­ரான டாக்­டர் பெலிண்டா முரு­கேசு 1976ஆம் ஆண்­டில் அதி­பர் கல்­வி­மான் விரு­தைப் பெற்­றார். 46 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, இவ்­வி­ரு­தி­னைப் பெற்­றி­ருக்­கும் இரண்­டா­வது உள்ளூர் இந்­தி­யப் பெண் எனும் பெருமை 19 வயது கோவிந்­தன் சோலை­வள்­ளி­யைச் சேரும்.

அதி­பர் கல்­வி­மான் உப­கா­ரச் சம்­ப­ளம், சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் உப­கா­ரச்­சம்­ப­ளம் என இரட்டை உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­றுள்ள சோலை­வள்ளி, நெதர்­லாந்­தி­லுள்ள லைடன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அர­சி­யல் அறி­வி­யல் பட்­டக்கல்­வி­யில் அனைத்­து­லக உற­வு­கள், அமைப்­பு­கள் தொடர்­பான கல்­வியை மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பயி­ல­வுள்­ளார்.

நெதர்­லாந்­தில் மேற்­ப­டிப்­பு

SPH Brightcove Video

லிட்­டில் இந்­தி­யா­வின் ரேஸ் கோர்ஸ் சாலை­யில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி கட்­ட­டத்­தின் ஒன்­ப­தா­வது மாடி­யில் இருக்­கும் சோலை­வள்­ளி­யின் வீட்­டுக்­குச் சென்­ற­போது வாச­லில் பசு­மை­யான செடி­களும் மலர்ந்த முகங்­களும் வர­வேற்­றன.

அன்­றி­ரவு நெதர்­லாந்து செல்ல ஆயத்­த­மா­கிக்­கொண்­டி­ருந்­தார் சோலை. பய­ணப் பெட்­டி­கள் வர­வேற்பு அறை­யில் தயா­ராக இருந்­தன. வீவக குடி­யி­ருப்­பில் வளர்ந்­தது பல இனி­மை­யான நினை­வு­க­ளைத் தந்­தது என்­றும் அக்­கம்­பக்­கத்­தில் உள்­ளோர் உற­வி­னர்­கள் போல் ஒரே குடும்­ப­மாக வாழ்ந்து வரு­வ­தா­க­வும் சோலை கூறி­னார்.

“எனக்கு இவ்­வி­ருது வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்ட நாளன்று பக்­கத்­து­வீட்­டில் உள்­ள­வர்­கள் எனக்கு ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கும் வகை­யில் வீட்­டுக்கு வந்து கேக் வெட்டி கொண்­டா­டி­னர். பல ஆண்­டு­க­ளாக இதே புளோக்­கில் வசித்து வரு­வ­தால் இன்ப துன்­பங்­களில் அனை­வ­ரும் பங்­கெ­டுத்து கொள்­வோம்” என்று நெகிழ்­வு­டன் கூறி­னார் சோலை.

“சோலைக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­பர் கல்­வி­மான் விருது அவ­ரது கடின உழைப்­பிற்­கும் மனத்­தி­டத்­திற்­கும் கிடைத்த அங்­கீ­கா­ரம். இவ்­வி­ரு­தின் முக்­கி­யத்­து­வ­மும் ஆழ­மும் பெற்­றோர் என்ற முறை­யில் இன்­னும் முழு­வ­து­மாக எங்­க­ளுக்கு புலப்­ப­ட­வில்லை,” என்று பூரித்­த­னர் சோலை­யின் பெற்­றோர்.

ஆங்­கிலோ சீனத் தொடக்­கக் கல்­லூரி­யில் படித்த காலத்­தில் தற்­காப்பு அமைச்சு நடத்­திய மெய்­நி­கர் அனு­பவ நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­றது வருங்­கா­லப் பணி­யி­னைத் தேர்ந்­தெ­டுக்க அவ­ருக்கு உத­வி­யது.

“என்­னு­டைய எண்­ணத்­திற்­கும் சுபா­வத்­திற்­கும் திற­னிற்­கும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் இணை­வது சரி­யா­ன­தொரு தேர்­வாக இருக்­கும் என்று தோன்­றி­யது. தற்­ச­ம­யம் நான் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் ராணு­வப் பயிற்சி அதி­கா­ரி­யாக இருக்­கி­றேன். என்­னு­டைய படிப்பு முடிந்த பிறகு சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் பணி­புரிவேன்,” என்றார் சோலை மிகுந்த ஆவ­லு­டன்.

கல்வி என்­பது மதிப்­பெண் சார்ந்­தது மட்­டும் அல்ல என்­ப­தற்கு சோலை­வள்ளி ஓர் எடுத்­துக்­காட்டு. பள்ளி காலங்­களில் அவர் சாரா­சரி மாண­வி­யா­கவே தேர்ச்சி பெற்­றார்.

எனி­னும், உயர்­நி­லைப் பள்­ளிக் காலத்­தி­லி­ருந்து பொதுக் கொள்­கை­கள், அனைத்­து­லக உற­வு­கள் தொடர்­பான தலைப்­பு­களில் பள்­ளி­களில் நடை­பெ­றும் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­க­ளி­லும் விவா­தங்­க­ளி­லும், பட்­டி­மன்­றங்­க­ளி­லும் பங்­கெ­டுத்­தார்.

பக்­க­ப­ல­மாக நிற்­கும் பெற்­றோர்

சோலை­வள்ளி ஆபத்­து­கள் நிறைந்த ராணு­வப் பணி­யைத் தேர்ந்­தெ­டுத்­ததை அடுத்து, மகள் அறி­வி­யல் துறை­யில் மேற்­ப­டிப்­பைத் தொடர வேண்­டும் எனத் தாயார் திரு­வாட்டி ருக்­மணி விரும்­பி­னார். எனி­னும், சோலை தமது முடி­வில் உறு­தி­யாக இருந்­த­தால், அவ­ரது பெற்­றோர் இந்­தத் துறை­யில் எதிர்­கா­லம் எப்­படி இருக்­கும், வேலைச் சூழல், வரு­மா­னம் போன்­றவை பற்றி குடும்­ப­மாக கலந்­து­ரை­யா­டிய பின்­னர் சோலை­யின் விருப்­பத்­திற்கு துணை நிற்க உறு­தி­கொண்­ட­னர்.

“சோலை மிகுந்த தைரி­ய­சாலி. தன்­னிச்­சை­யாக செயல்­ப­டக்­கூ­டி­ய­வர். தம்முடைய வேலை­களை தாமே செய்ய விரும்­பு­ப­வர். அவ­ரது சொல், எண்­ணம், சிந்­தனை மற்­றும் செய­லில் என்­றுமே எனக்கு நம்­பிக்கை உண்டு,” என்று தலைமை நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் சோலை­யின் தந்தை திரு கோவிந்­தன், 60, தெரி­வித்­தார்.

சித்­தார் இசை­யி­லும் திற­மை­சாலி

வீட்­டில் ஆங்­காங்கே சோலை தன்­னு­டைய பெற்­றோர், அண்­ண­னு­டன் எடுத்­துக்­கொண்ட குடும்ப நிழற்­ப­டங்­கள் இனி­மை­யான நினை­வு­க­ளின் சான்­று­க­ளாக கம்­பீ­ர­மாய் தொங்­கிக்­கொண்­டி­ருந்­தன. பெரும்­பா­லும் ராணுவ உடை­யில் மிடுக்­கா­கக் காட்­சி­ய­ளிக்­கும் சோலை பட்­டுப்பாவாடை கட்டி ஒரு புகைப்­ப­டத்­தில் சித்­தார் வாசித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

எட்டு வயது முதல் தொடர்ந்து எட்டு ஆண்­டு­கள் சித்­தார் கற்ற சோலை, தேசிய கலை­கள் மன்­றத்­தின் சில இசைப் போட்டி களி­லும் பங்­கேற்­றுள்­ளார். பயிற்சி வகுப்பு கள், போட்­டி­கள், பரி­சு­க­ளைத் தாண்டி இந்­தி­யக் கலை­களை ரசித்து பாராட்­டு­வதற்­கான கலை ஞானம் வேண்­டும் என்பது சோலை­யின் கருத்து. சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்று வரும் இவ­ரு­டைய அண்­ணன் கோ. லெட்­சு­ம­ணன், 24 தபேலா இசைக்­க­ருவி வாசிப்பதில் பயிற்சி பெற்­ற­வர்.

“எங்­கள் பிள்­ளை கள் இரு­வ­ருக்­கும் படிப்பு, கலை, விளை­யாட்டு ஆகிய மூன்று துறை­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று எண்­ணி­னோம். பெற்­றோ­ராக இவற்றை அறிமுகப்­ப­டுத்­து­வ­தும் இதற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­ப­தும் எங்­கள் கடமை என்று நினைத்­தோம். கட்­டுப்­பா­டும் ஆர்­வ­மும் இருந்­தால் அதில் அவர்­கள் தொடர்ந்து ஈடு­ப­டு­வர்,” என்று கூறினார் 55 வய­தான சோலை­யின் தாயார் திரு­வாட்டி ருக்­மணி.

மென்­பந்­தாட்­டம்

சோலை சிறந்த மென்­பந்து (Soft ball) விளை­யாட்­டா­ளர். 2019ஆம் ஆண்­டின் தேசிய பெண்­கள் மென்­பந்­தாட்ட போட்­டி­ யில் மூன்­றா­வது இடம்­பி­டித்த தஞ்­சோங் காத்­தோங் பெண்­கள் உயர்­நி­லைப்பள்­ளி­யின் மென்­பந்­தாட்­டக் குழு­வில் அவர் இடம்­பெற்­றி­ருந்­தார். மேலும் ஆங்­கிலோ சீனத் தொடக்­கக் கல்­லூரி­யில் படித்த காலத்­தில் அக்­கல்­லூ­ரி­யின் மென்­பந்­தாட்­டக் குழு­வின் தலை­வி­யா­க­வும் அவர் இருந்­தார். தேசிய அள­வில் நடை­பெற்ற பல போட்­டி­களில் தன் அணி­யைப் பிரதி

நிதித்து பல பரி­சு­க­ளை­யும் விரு­து­க­ளை­யும் வாங்­கிக் குவித்­துள்­ளார்.

“விளை­யாட்டு என்­னு­டைய உட­லை­யும் மன­தை­யும் வலி­மை­யுடன் வைத்­துக்­கொள்ள உத­வி­யது. தக்க நேரத்­தில் சரி­யான முடி­வு­களை எடுக்­க­வும் வெற்றி தோல்­வி­களை பக்­கு­வத்­து­டன் கையா­ள­வும் பழக்­கி­யது. மேலும், குழு­வு­டன் இணைந்து ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டுக்­கொ­டுத்து செயல்­படும் அனு­ப­வத்­தை­யும் எனக்கு வழங்­கி­யது,” என்று விளை­யாட்­டின் வழி கற்­றுக்­கொண்ட வாழ்க்­கைப் பாடங்­களைப் பகிர்ந்­து­கொண்­டார் சோலை.

பொதுப்­ப­ணி­களும் விரு­து­களும்

பதின்மவய­தில் பொதுச் சேவை­யில் சோலை கவ­னம் செலுத்த பின்­ன­ணி­யாக அமைந்­தது அம்­மா­வின் தொண்­டூ­ழிய முனைப்பு.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தில் (சிண்டா) பல ஆண்டு­களா­கத் தொண்­டூ­ழி­யம் செய்து வரு­கி­றார் தக­வல் தொழில்­நுட்ப வல்­லு­ந­ரான திருமதி ருக்­மணி. தமது பிள்ளை­ களும் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட வேண்­டும் என அவர் விரும்­பி­னார். உயர் நிலைப்­ பள்­ளி­க் காலத்தில் அம்­மா­வு­டன் தொண்­டூ­ழி­யம் செய்ய ஆரம்­பித்­தார் சோலை. தொடக்­கப்­பள்ளி மாண­வர்­களுக்கு ‘கோடிங்’ எனப்­படும் நிர­லிடுதல் கற்­றுக்­கொ­டுத்­தார்.

சோலை­வள்ளி மாண­வர்களுக்கு மேற்­ப­டிப்பு மற்­றும் தொழில் வழி­காட்­டல் பிர­தி­நி­தி­யா­க­வும் செயல்­பட்­டுள்­ளார். ஆங்­கிலோ சீனத் தொடக்­கக் கல்­லூரி­யில் படித்­த­போது 2022, 2021 ஆண்­டு­க­ளுக்­கான சிறந்த கலைப் பிரிவு மாண­வி­யாகத் திகழ்ந்த இவர், இரண்­டாம் ஆண்­டில் பள்­ளித் தலை­மை­யா­சி­ரி­ய­ரின் சிறந்த மாண­வர் பட்­டி­ய­லுக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் இளம் தலை­வர் விருது, சிறந்த கல்­வித் தேர்ச்­சிக்­கான ‘எடுசேவ்’ விருது, சிறந்த தலை ­மைத்­துவ விருது போன்ற பல விரு­துகளைப் பெற்­றி­ருக்கிறார் இவர். இந்­திய சமூ­கத்­தில் மூத்­தோ­ருக்­கும் இளம் தலை­மு­றையி­ன­ருக்­கும் பல வழி­களில் தொண்டூழி­யம் புரிந்­து­வ­ரும் இவர், தடுப்­பூ­சித் தூத­ரா­க­வும் மத்­திய போதைப்பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் இளம் போதைப் புழங்­கித் தடுப்­பா­ள­ரா­க­வும் விளை­யாட்­டுத் துறை­யில் தேசிய தொண்­டூ­ழிய இயக்­கத்­தில் ஆக்ட்­டிவ் சிங்­கப்­பூ­ரு­டன் (Active Singapore) தொண்­டூ­ழி­ய­ரா­க­வும் சோலைவள்ளி பங்­காற்­றி­யுள்­ளார்.

படிப்பு, இசை, விளை­யாட்டு, தொண்­டூ­ழி­யம் என பல­வற்­றி­லும் சிறந்து விளங்­கும் சோலை­வள்ளி தன்­னு­டைய நேரத்தை மிகுந்த நேர்த்­தி­யு­டன் திட்­ட­மி­டு­கி­றார்.

அவ்­வப்­போது குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் நேரம் செல­வ­ழிக்­கி­றார். புத்­த­கம் வாசிப்­பது, திரைப்­ப­டம் பார்ப்­பது, பாடல்­க­ளைக் கேட்­பது போன்­றவைத் இவரது பொழு­து­போக்கு­கள்.

போது­மான ஓய்வு உட­ல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் உற்­பத்­தித்­தி­றனை அதி­கப்­ப­டுத்­தும் என்று தான் அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

“எனக்கு கிடைத்­துள்ள அரிய வாய்ப்பை முழு­வ­து­மாகப் பயன்­ப­டுத்தி, வருங்­கா­லத்­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் பணி­பு­ரிய விரும்­பு­கி­றேன். அர­சாங்­கம் சார்ந்த கொள்கை உரு­வாக்­கங்­க­ளி­லும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு காண்­ப­தி­லும் சமு­தாய வளர்ச்­சிக்கு உகந்த முடி­வு­களை எடுப்­ப­தி­லும் அதி­கம் பங்­க­ளிக்க ஆவலாய் உள்­ளேன்,” என்றார் சோலைவள்ளி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!