கைக்கு எட்டா உயரத்தில் கடை வீடுகளின் விலை

சிங்­கப்­பூர் மர­பு­டை­மை­யில் கடை வீடு­க­ளுக்கு தனி இடம் உண்டு. சாங்கி முனை­யம் நான்­கில் 'ஹெரி­டேஜ் ஸோன்' என்று அழைக்­கப்­படும் பகு­தி­யில் சிங்­கப்­பூர் கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்­கும் வகையில் கடை­கள் கடை­வீ­டு­கள்­போல் வடி­ வ­மைக்­கப்­படும் அள­வுக்கு, சிங்­கப்­பூ­ரின் பாரம்பரி­யத்­து­டன் பின்­னிப்­பி­ணைந்­தவை இக்­க­டை­வீ­டு­கள்.

இத்­த­கைய கடை­வீ­டு­கள் அதி­கம் இருக்­கும் இடங்­களில் லிட்­டில் இந்­தியா வட்­டா­ர­மும் ஒன்று. சைனா டவுன், கம்­போங் கிளாம், கிளார்க் கீ போன்ற மற்ற இடங்­க­ளி­லும் கடை­வீ­டு­கள் இருக்­கின்­றன. இவற்­றின் விலை­களும் வாட­கை­களும் தொடர்ந்து உயர்ந்து வரு­கின்­றன. கடந்த சில ஆண்­டு­க­ளாக லிட்­டில் இந்­தி­யா­ வட்டாரத்தில் உள்ள கடை­வீ­டு­க­ளுக்­கான தேவை முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்­துள்­ளது. இதற்­கான கார­ணங்­கள் பல.

சிங்­கப்­பூ­ரர்­கள், சிங்­கப்­பூர் வாழ் இந்­தி­யர்­கள், வெளி­நாட்­ட­வர்­கள், மற்ற இனத்­த­வர்­கள் என அனை வரை­யும் ஈர்க்­கும் லிட்­டில் இந்­தியா, உணவு, உடை­கள், அலங்­கா­ரப் பொருட்­கள், நகை, வழி­பாட்­டுப் பொருட்­கள் போன்ற பல தேவை­களை பூர்த்தி செய்­யும் ஒரே இட­மாக திகழ்­கிறது. மேலும் குடும்­பங்­கள், நண்­பர்­கள் என்று பல­ரும் ஒன்று சேரும் இட­மா­க­வும் இருக்­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­க­மாக வந்து போகும் இட­மாக இருப்­ப­தா­லும் நகர மையத்­தில் இருப்­ப­தா­லும், இயல்­பா­கவே சொத்து விலை இங்கு ஏறு­மு­க­மா­கவே உள்­ளது. இத­னால், இந்த இடம் அண்­மை­யில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்­கும் இட­மா­க­வும் மாறி­யுள்­ளது.

"லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள கடை­வீ­டு­களை அதி­க­மாக சீனா, ஹாங்­காங், தைவான், இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து வரும் முத­லீட்­டா­ளர்­கள் வாங்கு கிறார்­கள்," என்று குறிப்­பிட்ட சொத்து முக­வர் பிரபு ஹரி­தாஸ், இந்­திய முத­லீட்­டா­ளர்­கள் இன்­னும் தேக்கா கடை­வீ­டு­க­ளின் மதிப்பை அறி­ய­வில்லை என்­றார்.

உள்­நாட்­ட­வர்­கள் கொடுக்­கும் விலை­யை­விட அதி­க­மாக விலை­கொ­டுத்து வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் தேக்கா கடை­வீ­டு­களை வாங்கு கின்­றன. அத­னால், தற்­போது பெரும்­பா­லான கடை­கள் அவற்­றின் நிர்­வா­கத்­தின்கீழ் இருக்­கின்­றன. இவை நிர்­ண­யிக்­கும் வாடகை பெரிய நகைக்­க­டை­கள் அல்­லது பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கே கட்­டுப்படி­யா­கிறது.

பெய­ருக்கு ஏற்­ற­வாறு இந்­தி­யர்­களும் இந்­திய கலா­சா­ர­மும் கொண்ட வண்­ண­ம­ய­மான லிட்­டில் இந்­தி­யா­வில் குறிப்­பிட்ட அள­வில் கடை வீடு­க­ளின் எண்­ணிக்கை இருந்­தா­லும், இவற்றை வாங்­க­வும் இங்கு வியா­பா­ரத்தை தொடங்­க­வும் கடை­வீ­டு­க­ளின் எண்­ணிக்­கையைவிட ஆர்­வம் அதி­க­மாக உள்­ளது.

கூடு­தல் முத்­திரை வரி

லிட்­டில் இந்­தி­யா­வில் கடை வீடு­களை வாங்­கு­வ­தில் முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் ஆர்­வம் அதி­க­ரிப்­ ப­தற்கு இன்­னொரு கார­ணம் இருக்­கிறது.

லிட்­டில் இந்­தி­யா­வின் பெரும்­ பா­லான கடை­வீ­டு­கள் முழு­மை­யாக வர்த்­தக சொத்­துக்­க­ளாக வகைப் படுத்­தப்­பட்­டுள்­ளன. முதல் குடி­ யிருப்பு சொத்­துக்­குப் பின்பு வாங்­கக்­கூ­டிய அனைத்து குடி­யி­ருப்பு சொத்­து­க­ளுக்­கும் செலுத்­த­வேண்­டிய 'ABSD' எனும் வாங்­கு­ப­வர்­க­ளுக்­கான கூடு­தல் முத்­திரை வரியை, வர்த்­தக சொத்­து­களை வாங்­கு­வோர் செலுத்த தேவை­யில்லை. அதே­போல விற்­ப­னை­யா­ளர்­கள் 'SSD' எனும் விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்­கான முத்­திரை வரி­யை­யும் செலுத்தத் தேவை இல்லை. இந்தச் சலு­கை­கள் முத­லீட்­டா­ளர்­களை ஈர்ப் பதற்கு ஒரு கார­ண­மா­கும்.

ரேஸ் கோர்ஸ் சாலை­யில் உள்ள சில கடை­வீ­டு­கள் இந்­தச் சலு­கைக்கு உட்­ப­டாது. இத­னால் இங்கு சொத்து வாங்­கு­ப­வர்­கள் கடை வீடு களின் மேல் மாடிக்கு குடி­யி­ருப்பு சார்ந்த வரி­யை­யும் செலுத்­தும் அவ­சி­யம் உள்­ளது.

தேக்­கா­வின் மற்­ற சாலை­களில் இந்த நிபந்­தனை இல்­லா­த­தால் அவற்­றுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. அதன் விலை­யும் அதி­க­மா­கவே உள்­ளன. குறிப்­பாக, மக்­கள் நட­மாட்­டம் அதி­கம் இருக்­கும் சிராங்­கூன் சாலை, பஃப்ளோ சாலை, சையத் ஆல்வி சாலை, டன்­லப் ஸ்தி­ரீட் போன்­ற­வற்­றில் உள்ள கடை­வீ­டு­க­ளின் விலை­கள் தொடர்ந்து அதி­க­ரித்­துக்கொண்டே இருக்­கின்­றன.

சிராங்­கூன் சாலை­யில் 2006ஆம் ஆண்டு $1.9 மில்­லி­ய­னுக்கு விலை­பே­சப்­பட்ட மூன்று மாடி கடை­வீட்­டின் மதிப்பு இன்று 11லிருந்து 21 மில்லியன் வெள்ளி வரை­ உள்­ளது. அதே­போல அந்­தக் கடை­வீட்­டின் வாட­கை­யும் $6,000லி­ருந்து அண்­மை­யில் $30,000க்கு உயர்ந்­துள்­ளது.

அச்­சா­லை­யின் மற்­றக் கடை­வீடு களின் விலை­யும் தற்­போது எட்டி லிருந்து ஒன்­பது மில்­லி­யன் வெள்ளி ஆக உள்­ளது. சிராங்­கூன் சாலை­யில் கடை­வீட்­டின் வாடகை, 11,000 வெள்­ளி­யி­லி­ருந்து $21,000 வரை உள்­ளது. சில பெரிய கடை­க­ளுக்கு $30,000 வரை வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. கடை­வீட்­டின் வாடகை பஃப்ளோ சாலை­யில் $10,000 முதல் $15,000 வரை உள்­ளது. அதே­போல் சையது ஆல்வி சாலை­யில் $8,000 முதல் $10,000 வரை இருக்­கிறது. ஆனால் இதே சாலை­யில், சில கடை­க­ளுக்கு $20,000லிருந்து $30,000 வரை வாடகை இருப்­ப­தாக தெரி­கிறது. இந்த வாடகை 1,000 சதுர அடி­களுக்கு உட்­பட்ட சொத்துகளின் வாட­கை­யா­கும்.

லிட்­டில் இந்­தி­யா­வின் கடை­வீடு களுக்கான தேவை தொடர்ந்து இருக்கிறது. கடைவீடுகளின் விற் பனை விலை, வாடகை அதிகமாக இருந்தாலும் பெரிய நிறுவனங்கள் போட்டிபோட்டு எடுக்கின்றன,

இதுவே விற்பனை விலை, வாடகை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்­பது சொத்து முக­வர்­க­ளின் கருத்­தா­கும்.

சொத்து வாங்கி, நீண்­ட­கா­லம் பயன்­ப­டுத்தி லாபம் ஈட்­டும் முத­லீட்­டா­ளர்­க­ளு­டன், குறு­கிய கால­கட்­டத்­தில் கைமாற்றி லாபம் ஈட்­டு­ப­வர்­களும் இருக்­கி­றார்­கள்.

உதா­ர­ணத்­திற்கு, இந்த ஆண்­டில் எண் 147 கிட்­ச­னர் சாலை­யில் உள்ள கடை­வீடு $4.3 மில்­லி­ய­னுக்கு வாங்­கப்­பட்டு ஐந்தே மாதங்­களில் $8 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சொத்தை வாங்கி விற்ற வருக்கு $3.7 மில்­லி­யன் லாபம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற நிகழ்­வு­கள் தேக்­கா­வில் மட்­டு­மல்­லா­மல் கடை­வீ­டு­களை கொண்ட மற்ற இடங்­க­ளி­லும் நடக்­கின்­றன.

விலை அதி­க­ரிக்க இன்­னொரு கார­ண­மும் இருக்­கின்­றது. நகர மறுசீர­மைப்பு ஆணை­யத்­தின் பழ­மைப் பாது­காப்பு திட்­டத்­தின்கீழ் இருக்­கும் லிட்­டில் இந்­தியா கடை­வீ­டு­கள் பெரும்­பா­லும் 99 ஆண்­டு­கால குத்­தகை காலத்­தின்கீழ் வரு­கின்­றன. சில கடை­கள் 999 ஆண்டு கால குத்­த­கை­யைக் கொண்­டவை. குத்­த­கைக்­கா­லம் முடிந்த பிறகு அர­சாங்க நில­மாக இவை அறி­விக்­கப்­பட்­டுவி­டும்.

விற்­பனை விலை உயர்­வ­தற்கு வங்கி வட்டி விகி­த­மும் ஒரு கார­ண­மாக உள்­ளது. பொது­வாக 3% ஆக இருக்­கும் வட்டி விகி­தம், சில நேரங்­களில் இன்­னும் அதி­க­ரிக்­கும்­போது சொத்து வாங்­கு­ப­வர்­க­ளுக்கு மாதாந்­தி­ரச் செலவை கூட்­டு­கிறது. இந்­தச் செலவை ஈடு­கட்ட உரி­மை­யா­ளர்­கள் வாட­கை­யைக் கூட்­டு­கி­றார்­கள்.

மதிப்­பீட்­டா­ளர்­கள் ஒரு சொத்­திற்கு நிர்­ண­யிக்­கும் விலை­யை­விட உயர்ந்த விலைக்கே நிலச் சொத்து முதலீட்டார்கள் சொத்­து­களை வாங்குகி­றார்­கள், விற்­கி­றார்­கள். சொத்து மதிப்­பீட்­டா­ளர்­கள் நிர்ண யிக்கும் கடைவீடுகளின் மதிப்பைவிட வங்­கி­கள் மதிப்­பி­டும்போது கடை வீடு­க­ளின் விலை உயர்­வாக உள்­ளன என்­பது பொது­வான கருத்­தாக உள்­ளது.

இருப்­பி­னும், கடை­வீ­டு­களை முத­லீட்­டா­ளர்­கள் தொடர்ந்து வாங்­கு­கி­றார்­கள். கார­ணம் கடை­வீ­டு­க­ளின் ஏறுமுகமான விலைகள்தான். இன்று அதி­க­மான விலைக்கு ஒரு சொத்தை வாங்­கி­னா­லும், வருங்­கா­லத்­தில் லாபம் ஈட்­ட­லாம் என்ற நம்­பிக்­கை­நிலவுகிறது. அது­போக, சிங்­கப்­பூ­ரின் சட்­ட­திட்­டங்­க­ளால் சிங்­கப்­பூர் முத­லீட்­டா­ளர்­கள், குறிப்­பாக வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­கள் இங்கு சொத்து வாங்­கு­வதை பாது­காப்­பா­ன­தாகக் கரு­து­கி­றார்­கள் என்று சொத்து உரிமையாளரான அரு­ணா­ ச­லம் ராம­சாமி, 61, கூறி­னார். இந்த பாது­காப்­பும், லிட்­டில் இந்­தியாவின் சொத்­து ­மதிப்பு தொடர்ந்து மேல்­நோக்கிச் செல்லும் தன்மையாலும் இங்கு சொத்­து­களை வாங்க எண்ணு கிறார் இவர்.

இது மாதி­ரி­யான உயர்­வு­க­ளால் பாரம்­ப­ரிய தொழில்­களை செய்­ப­வர்­கள் வியா­பா­ரத்தை தொடர முடி­யா­மல் தேக்­காவை விட்டு இடம்­பெ­ய­ரும் நிலைமை ஏற்­ப­டு­கிறது. முன்பு, உள்­ளூர் வியா­பா­ரி­கள் அதி­கம் புழங்­கிய தேக்­கா­வில் இன்று வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளின் வர்த்த கங்கள் கூடி­யுள்­ளன.

பத்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சொத்­து­களை வைத்­தி­ருக்­கும் நிலக்­கி­ழார்­கள் தங்­க­ளது வாட­கையை பெரும்­பா­லும் உயர்த்துவதில்லை என்­றார் ஜோதி புஷ்­பக் கடை­யின் உரி­மை­யா­ள­ரான ராஜ்­கு­மார்.

ஆனால் புதி­தாக சொத்து வாங்­கும் முதலீட்டாளர்களிடம் இந்­தச் சலு­கையை எதிர்­பார்க்க முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­றி­தான்.

வாடகை அதி­க­ரிப்­ப­தால் விற்­கப்­படும் பொருள்­கள், சேவை­க­ளின் விலை­யும் நாளுக்­கு­நாள் கூடி வரு­கிறது. சரா­ச­ரி­யாக ஒரு இட்லி விலை $1.50 முதல் $2.50 ஆக­வும் சாதா தோசை $3.00இலி­ருந்து $4.00 ஆக­வும் உள்­ளது.

"ஒரு காலத்­தில் ஆர்ச்­சர்ட் சாலைக்­குப் போவ­து­போல லிட்­டில் இந்தியாவுக்குப்போவது விலை­­உயர்ந்த அனு­ப­வ­மா­க­லாம்," என்றார் தொழில்­நுட்­பத் துறை­யில் வேலை ­பார்க்­கும் திரு­வாட்டி விஜயா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!