‘ஹார்ட் விளையாட வாய்ப்பு உள்ளது’

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரில் இன்று பின்னி­ரவு நடைபெற உள்ள காலிறுதி ஆட்­டத்­தின் முதல் சுற்றில் சிட்டியும் பிஎஸ்ஜியும் மோதுகின்றன. காயம் கார­ண­மாக விளை­யாடா­மல் இருந்த சிட்டி குழுவின் கோல்­காப்­பா­ளர் ஜோ ஹார்ட், இன்றைய ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு உள்­ள­தாக கூறினார் அக்­கு­ழு­வின் மற்றொரு கோல் ­காப்­பா­ள­ரான வில்லி கபலெரோ. மேலும், இந்த ஆட்­டத்­தில் சிட்டி குழுவின் கோல்­காப்­பா­ளர் யார் என்பதை பெலி­கி­ரினி இன்னும் உறுதி செய்­யா­மல் இருப்­ப­தா­க­வும் தெரி­கிறது.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்

ஆட்­ட­மொன்­றில் யுனைடெட் குழு­விற்கு எதிராக விளை­யா­டி­ய­போது காய­மடைந்த ஜோ ஹார்ட் அதன்­பி­றகு விளை­யா­ட­வில்லை. அதனால், போர்ன்­மத்-சிட்டி குழுக்­கள் மோதி­ய­போது கபலெரோ சிட்­டி­யின் கோல் காப்­பா­ள­ராக இருந்தார். "பிஎஸ்ஜிக்கு எதிரான ஆட்­டத்­தில் விளை­யா­டு­வது பற்றி நான் இதுவரை நிர்­வா­கி­யி­டம் பேச­வில்லை. ஜோவின் உடல்­ந­லம் எந்த­ளவு முன்­னே­றி­யுள்­ளது என்பது பற்­றி­யும் தெரி­ய­வில்லை. "பிரெஞ்சு லீக் வெற்றியாளர் களான பிஎஸ்ஜி குழுவை எதிர்த்து விளை­யா­டு­வது என்பது எளிதான ஒன்றல்ல. "அக்குழுவிற்கு எதிராக விளை­யா­டும் வாய்ப்பு கிடைத்­தால் அது மிகப்­பெ­ரிய ஒன்றா­கும்," என்றார் கபலெரோ. "திறமையான ஆட்டக்காரர் களைக் கொண்ட மிகப்­பெ­ரிய குழுவை இன்று பின்னிரவு சந்­திக்கிறது சிட்டி. எனவே, கடந்த பரு­வத்­தில் நடந்த தவ­று­களில் இருந்து கற்­றுக்­கொள்ள வேண்டும் என்றும் கூறினார். "கடந்த பரு­வத்­தில் நியூ­கா­சலை 4-0 என்ற கோல் கணக்­கில் வென்ற பிறகு, பார்­சி­லோனா­வு­டன் மோதிய ஆட்­டத்­தில் சிட்டி குழு தோல்­வியைத் தழு­வி­யது. "இந்த பரு­வத்­தி­லும் அதேபோல், கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் போர்ன்­மத்தை நாம் 4=0 என்ற கோல்­க­ணக்­கில் வீழ்த்­தி­யுள்­ளோம். ஆனால், பிஎஸ்ஜிக்கு எதிரான இன்றைய ஆட்­ட­ம் அதுபோல் எளிதாக இருக்­கும் என்று நினைத்து விடக்­கூ­டாது. "இது இரண்டு பெரிய குழுக்­களுக்கிடையிலான ஆட்டம் என்பதை நாம் உணர்ந்து விளை யாட வேண்டும்," என்று அவர் கூறினார்.

சிட்டி குழுத்­ தலை­வர்

வின்­சென்ட் கொம்பா­னி­, ரஹீம் ஸ்டெர்­லிங் ஆகிய இரு­வ­ரும்­கூட காயம் கார­ண­மாக இன்றைய ஆட்­டத்­தில் விளை­யா­ட­மாட்­டார்­கள். அதேபோல், முட்­டி­யில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக யாயா தோரே விளை­யா­டு­வ­தும் சந்­தே­கம் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!