சமநிலையிலும் சாதகம் கண்ட லிவர்பூல்

டோர்ட்மண்ட்: யூரோப்பா லீக் காற்பந்துக் கிண்ணத்தில் ஜெர் மனியின் பொருஸியா டோர்ட் மண்ட் குழுவும் இங்கிலாந்தின் லிவர்பூல் குழுவும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆயினும், காலிறுதி இரண்டாம் சுற்று ஆட்டம் ஆன்ஃபீல்ட் விளை யாட்டரங்கில் நடக்கும் என்ற சொந்த மண் சாதகத்துடன் எதிர் அணி அரங்கில் ஒரு கோல் புகுத்திய சாதகமும் இருப்பதால் அரையிறுதிக்குள் நுழைந்துவிட லாம் எனும் நம்பிக்கையுடன் லிவர்பூல் குழு காத்திருக்கிறது. அக்குழுவின் இப்போதைய நிர்வாகியாக இருப்பவர் யர்கன் க்ளோப். அவரது நிர்வாகத்தின் கீழ்தான் டோர்ட்மண்ட் குழு சிறந்த குழுவாக உருவெடுத்து, ஜெர்மானிய காற்பந்து லீக்கான 'புண்டஸ்லீகா' பட்டத்தையும் இருமுறை வென்றது. ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் இறுதிக்கும் முன்னேறியது. டோர்ட்மண்ட் குழுத் தலைவர் மேட்ஸ் ஹம்மல்ஸ் தலையால் முட்டிய பந்து தோட்டா வேகத்தில் வலைக்குள் புகுந்தது.

ஆயினும், அற்புதமாக பதில் கோலடித்து அந்த முன்னிலையை ஈடுகட்டினார் லிவர்பூல் குழுவின் ஆட்டக்காரர் டிவோக் ஓரிஜி. "எங்களது பார்வையில் இந்த முடிவு நல்ல முடிவுதான்," என்றார் க்ளோப். நேற்று அதிகாலை நடந்த மற்ற ஆட்டங்களில் நடப்பு வெற்றியாளரான செவியா, வியாரியால், ஷக்தர் டொனட்ஸ்க் ஆகிய குழுக்கள் 2-1 என்ற கோல் கணக்கில் எதிரணிகளை வீழ்த்தி, முன்னிலை பெற்றன.

பொருஸியா டோர்ட்மண்ட் குழுவின் ஜெர்மானிய ஆட்டக்காரர் மேட்ஸ் ஹம்மல்ஸ் (இடது) தலையால் முட்டிய பந்து வலைக்குள் புகாதவாறு தடுக்க முயன்ற லிவர்பூல் கோல் காப்பாளரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!