யூரோப்பா லீக்: ‘பேய்களைப் போல ஆடினர்’

லிவர்பூல்: ஜெர்மனியின் பொரு ஸியா டோர்ட்மண்ட் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக தமது குழுவினர் பேய்களைப் போல் வெறிகொண்டு விளையாடிய தாக லிவர்பூல் குழு நிர்வாகி யர்கன் க்ளோப் தெரிவித்துள்ளார். இவ்விரு குழுக்களுக்கு இடை யிலான காலிறுதி முதல் சுற்று ஆட்டம் 1=1 என இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலை யில் முடிந்தது.

இதனால் லிவர்பூல் குழுவிற்குச் சொந்தமான ஆன்ஃபீல்ட் விளை யாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆட்டத் தில் வெல்ல இரு குழுக்களும் கடுமையாகப் போராடின. முதல் பத்து நிமிட ஆட்டத்திற் குள்ளேயே இரண்டு கோல்களைப் போட்டு லிவர்பூல் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது டோர்ட்மண்ட் குழு. ஐந்தாம் நிமி டத்தில் கித்தர்யானும் ஒன்பதாவது நிமிடத்தில் அவ்பமெயாங்கும் அந்த கோல்களைப் போட்டனர். முற்பாதியில் பதில் கோலடிக்க முடியாமல் திணறிய லிவர்பூல் ஆட்டக்காரர்கள் இரண்டாம் பாதியில் வீறுகொண்டு எழுந்தனர். 48வது நிமிடத்தில் அக்குழுவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார் ஒரிஜி.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் வெற்றி கோலைப் புகுத்தி தமது குழுவை யூரோப்பா லீக்கின் அரையிறுதிக்குத் தகுதி பெறச் செய்த லோவ்ரனை (எண் 6) பாராட்ட விரையும் லிவர்பூல் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!