குஜராத்தைத் திணறடித்த டெல்லி அணி

ராஜ்கோட்: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வேரோடு சாய்த் துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மிகவும் பலம் வாய்ந்த இந்த இரு அணிகளான டெல்லி யும் குஜராத் அணியும் மோதிய போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற டெல்லி அணித் தலைவர் ஸாகீர் கான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். குஜராத்தின் முக்கிய பலமே அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் தான் எனக் கருதப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்மித்தும் (15) மெக்கல்லமும் (1) சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

அபாரமாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய ரெய்னாவும் தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தனர். இந்த ஜோடியை அமித் மிஸ்ரா பிரித்தார். 24 ஓட்டங்கள் எடுத் திருந்த ரெய்னா 'ஸ்டெம்பிங்' முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய கார்த்திக் 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந் தார். இறுதியில் ஜடேஜா (36) அதிரடியாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் நதீம் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!