மட்ரிட் குழுக்கள் மல்லுக்கட்டு

மட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை ஒருமுறையேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் கனவு, கனவாகவே தொடர்கிறது. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் உள்ள பெர்னபாவ் விளையாட்டரங் கில் நேற்று அதிகாலை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத் தில் ரியால் மட்ரிட் குழுவிடம் 1=0 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது சிட்டி. இவ்விரு குழுக்களுக்கு இடையே சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டம் ஒரு கோல்கூட அடிக்கப் படாமல் இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்நிலையில், முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்த சிட்டி குழு, இறுதிப் போட்டியிலும் அடியெடுத்து வைக் கும் முனைப்புடன் மட்ரிட்டுக்குச் சென்றது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ரியால் ஆட்டக்காரர் கேரத் பேல் பந்தைச் சக வீரருக்குத் தள்ளிவிட முயல, அதைத் தடுக்க முயன்றார் சிட்டியின் ஃபெர்னாண்டோ. ஆனால், பந்து அவரது தோளில் பட்டு வலையை நோக்கித் திரும் பியது. இதனால், இந்தப் பக்கம் பந்தை அடிப்பார் என எதிர்பார்த்து தயாராக இருந்த சிட்டியின் கோல் காப்பாளர் ஜோ ஹார்ட், பந்து திசை மாறி வந்ததைக் கண்டு அதைப் பாய்ந்து தடுக்க முயன்றார். ஆனாலும், அவரது முயற்சி ஈடேறாமல் போக, பந்து வலைக் குள் புகுந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்