கெமரூன் காற்பந்து ஆட்டக்காரர் மரணம்

புக்காரஸ்ட்: கெமரூன் காற்பந்துக் குழு மற்றும் டைனமோ புக்காரஸ்ட் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் பேட்ரிக் எகேங், ருமேனிய காற்பந்து லீக் போட்டியில் வீட் டொருல் கொன்ஸ்டான்டாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஏற் பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். ஆட்டத்தின் 63வது நிமிடத் தில் மாற்று ஆட்டக்காரராக 26 வயது எகேங் களமிறங்கினார்.

ஏழு நிமிடங்கள் கழித்து, அவர் திடலில் மயங்கி விழுந்ததை நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அந்த ஆட்டத்தைக் பார்த்துக்கொண் டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர் கள் கண்டு திகைத்தனர். அப்போது ஆட்டம் 3=3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. விளையாட்டரங்கத் துக்கு அருகில் இருந்த மருத்துவ மனைக்கு எகேங் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார். செய்தி அறிந்த டைனமோ புக்காரஸ்ட் ரசிகர்கள் பலர் மருத்துவமனையில் திரண்டனர். சிகிச்சை பலனின்றி எகேங் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டதை அடுத்து, டைனமோ புக்காரஸ்ட் ஆட்டக்காரர்கள், ரசிகர்கள் ஆகியோர் சோகத்தில் ஆழ்ந்தனர்.