லயன்ஸ் குழு பயிற்றுவிப்பாளராக சுந்தரமூர்த்தி வரக்கூடும்

சிங்கப்பூரின் தேசிய காற்பந்துக் குழுவான லயன்ஸ் குழு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உள்ளூர்ப் பயிற்றுவிப்பாளரை நியமிக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜெர்மன் பெர்ன்ட் சென்ற மாதம் பணியிலிருந்து விலகினார். அந்த இடத்தை நிரப்பு வதற்கு தெம்பனிஸ் ரோவர்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப் பாளர் வி.சுந்தரமூர்த்தி (படம்) அழைக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏஎஃப்சி°கிண்ணத்திற்காக தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்துக் குழுவைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியிடம் கடந்த வாரம் சிங்கப்பூர் காற்பந்து சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்தது. சுந்தரமூர்த்தியின் பணி நியமனம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் அது பற்றிய அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெயிட்ஸ்°டைம்சிடம் தெரி வித்துள்ளார். தேசிய காற்பந்துக் குழுவில் கடைசியாக பணியாற்றிய உள்ளூர் பயிற்றுவிப்பாளர் வின்சென்ட் சுப்பிரமணியம். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2000 வரை பதவி வகித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்