ராகுல் டிராவிட் சம்பளம் 2.61 கோடி ரூபாய்

­­­மும்பை: இந்திய ‘ஏ’ அணி, 19 வய­துக்­குட்­பட்ட அணிகளுக்குப் பயிற்­சி அளித்ததற்காக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட்டிற்கு சம்ப­ளமாக மொத்தம் 2.61 கோடி­ ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இதற்கான முதல் தவணையை கடந்த மார்ச் மாதம் கிரிக்­கெட் வாரியம் அவ­ருக்கு வழங்கி இருந்தது. அப்போது 1.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மீதி தொகையான 1.30 கோடி ரூபாய் இப்போது 2வது தவணை­யாக வழங்கப்பட்டுள்ளது. இத்து டன் அவரது முழு சம்பளமும் வழங்கப்பட்டுவிட்டதாக கிரிக்­கெட் வாரியம் தெரி­வித்­து உள்­ளது.

இதேபோல் வர்­ணணை­யா­ள­ராகப் பணி­யாற்­றிய கவாஸ்­ க­ருக்­குக் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை­யி­லான கால கட்­டத்­துக்கு 89.75 லட்­ச­ ரூபாயும் சிவ­ரா­ம­கி­ருஷ்­ண­னுக்கு 26.12 லட்­ச­ ரூபாயும் வழங்கப்­பட்­டு உள்­ளது. இதேபோல் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் அளவிலான போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் உள்கட்டமைப் புகளுக்கான மானியமாகவும் இந்த நிதி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கம் 88.43 லட்ச ரூபாயும் மும்பை கிரிக்கெட் சங்கம் 82.77 லட்ச ரூபாயும் நிதியாக பெற்றுள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி