உபர் பேட்மிண்டன் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

குன்ஷன்: உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. பெண்கள் அணிகளுக்கான இந்தப் போட்டியில் இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என தாய்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக வெற்றியாளர் ராட்சானோக்கிடம் தோல்வி கண்டார்.

மற்ற ஒற்றையர் ஆட்டங்களில் பி.வி.சிந்து, ருத்விகா ‌ஷிவானி காதே ஆகியோர் வெற்றி பெற்றனர். இதுபோல், இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா=அஸ்வினி ஜோடியும் வெற்றி பெற்றது. அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!