ஹைதராபாத் அணி வெற்றி

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ‘பிளே ஆஃப்’ சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாகை சூடி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி யும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. பூவா தலை யாவில் வென்ற கோல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, பந்தடித்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகஸ் 31 ஓட்டங்கள் எடுத்தார். கோல்கத்தாவின் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோர்கல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோல்கத்தா அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் கோல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியின் புவனேஸ் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்து தமது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். கோல்கத்தா அணியின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தமது அணிக்காக 31 ஓட்டங் களைக் குவித்த ஹைதராபாத் அணியின் ஹென்ரிகஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தோல்வியின் மூலம் தொடரிலிருந்து கோல்கத்தா அணி வெளியேறியுள்ளது. “163 ஓட்ட இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எடுக்க கூடியதாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு