‘பிரணவ் தேர்வு செய்யப்படாதது தொடர்பாக கட்டுக்கதைகள்’

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு கிடைத்த வாய்ப்பு, சாதனை படைத்த பிரணவ் விற்கு கிடைக்காதது தொடர்­பாக தவறான கட்­டுக்­கதை­கள் கூறப்­படு­கின்றன என்று கூறி யுள்ளார் பிரா­ணவ்­வின் தந்தை. மேற்கு மண்டல கிரிக்­கெட் அணியில் சச்சின் டெண்­டுல்­க­ரின் மகன் அர்ஜூன் டெண் ­டுல்­கர் இடம்­பெற்­றுள்­ளார். ஆனால், பண்டாரி கோப்பைக்­கான ஒரு போட்­டி­யில் 1009 ஓட்­டங்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே தேர்வு செய்­யப்­ப­டா­தது குறித்து, சமூக வலைத் ­த­ளங்களில் சிலர் கருத்­துத் தெரி­வித்­த­தால் சர்ச்சை ஏற் ­பட்­டது. பிர­ணவ்­ தேர்வு செய்­யப்­ப­டா­தது குறித்து விளக்­கம் அளித்­துள்ள அவரது தந்தை பிர­சாந்த், “மேற்கு மண்டல அணி வீரர்­கள், மும்பை கிரிக் ­கெட் சங்கத்­தின் 16 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான அணி யிலிருந்து தேர்வு செய்­யப்­படு ­கின்ற­னர்.

“அதில் அர்ஜுன் இடம் ­பெற்­றி­ருந்த­தால் தேர்வு செய்­யப்­பட்­டு உள்­ளார். பிரணவ் அந்த அணியில் இல்லை. ஆனால், பிரணவ் தேர்வு பெறா­த­தற்­குத் தவறான கட்­டுக்­கதை­களை வெளியி­டு­கின்ற­னர். “அர்­ஜு­னும் பிர­ணவ்­வும் நல்ல நண்­பர்­கள். இரு­வ­ரும் 19 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான போட்­டி­களில் விளையாடி தங்கள் திறமை­யால் முன்னேறி வரு­கின்ற­னர். “அர்ஜுன் ஒரு ஆல்-ரவுண்டர். பிரணவ் ஒரு விக்கெட் காப்­பா­ளர் மற்றும் பந்த­டிப்­பா­ளர்,” என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி