கடுமையாகப் போராடிய சிங்கப்பூர் வீரர்கள்

மியன்மார்: நான்கு நாடுகள் பங்கேற்கும் 'ஏஒய்ஏ பேங்க்' கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வியட்னாமோடு மோதியது சிங்கப்பூர். நேற்று இரவு 9.25 மணி நிலவரப்படி இரு குழுக்களுமே ஆட்டம் முழுவதும் கோல் எதுவும் போடாத நிலையில், சமநிலை நீடித்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. தேசிய காற்பந்துக் குழுவின் புதிய பயிற்றுவிப்பாளரான வி.சுந்தரமூர்த்தி தலைமையில் கிண்ணத்தை வெல்லும் எண்ணத் தோடு களமறிங்கியது சிங்கப்பூர்.

தொடக்கம் முதலே எதிர் பார்த்ததைப் போல வியட்னாம் குழு ஆட்டத்தில் விறுவிறுப்பு காட்டியது. குறிப்பாக, தற்காப்பில் அவர்கள் அமைத்த அரணை உடைக்க சிங்கப்பூர் குழுவினர் சிரமப்பட்டனர். சிங்கப்பூர் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி யின் உத்திகளை ஆட்டக்காரர்கள் கடைப்பிடித்தனர். அதனால் பல சமயங்களில் வியட்னாமின் தாக்குதல்களை அவர்களால் முறியடிக்க முடிந்தது. சிங்கப்பூர் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் அவ்வப்போது வியட்னாம் ஆட்டக்காரர்களின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தினர். ஆகவே, சிங்கப்பூர் கோல் காப்பாளர் ஹசான் சனிக்கு பெரிய வேலை இல்லாமல் போனது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!