ஐரோப்பிய கிண்ணப் போட்டிக்கு பிரான்ஸ் தயார்

ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டி 2016 சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டி பிரான்சில் உள்ள பல நகரங்களில் அடுத்த 30 நாட்களுக்கு நடைபெறும். அண்மையில் பாரிசில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக இப்போட்டி பாதுகாப்பான முறையில் நடந்து வெற்றிகரமாக முடியுமா என்று சந்தேகக் குரல்கள் எழுந்தன.

போட்டியில் பங்கெடுக்கும் குழுக்கள் உட்பட ஆட்டத்தைக் காண அலையலையாய் திரண்டு வரும் ரசிகர்களின் பாதுகாப்புக்கு இம்மியளவுகூட பாதிப்பு ஏற்படாது என்று பிரான்ஸ் சூளுரைத்துள்ளது. இதற்கு ஏற்றாற்போல நாடெங்கும் அதிகாரிகள் விழிப்புநிலையில் உள்ளனர். பாதுகாப்பு வளையமும் வலுப்படுத்தப் பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியை ஏற்று நடத்த தயார் என்று உலகிற்கு அறிவிக்கும் வகை யில் பிரான்சின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக தகுதிச் சுற்றில் கடுமையாகப் போராடி அதில் வாகை சூடிய 24 குழுக்கள் இனி ஐரோப்பிய கிண்ணத்துக்குப் போர் முரசைக் கொட்டும். போட்டியின் முதல் ஆட்டம் செயிண்ட் டெனிஸ் விளையாட்டரங்கில் நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதில் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ், ரொமேனியாவுடன் மோதுகிறது. போட்டியின் இறுதி ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஸ்டேட் டி பாரிஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.

போட்டியில் பங்கெடுக்கும் 24 குழுக் களும் 6 பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களில் வரும் குழுக்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். மூன்றாவது இடத்தில் வரும் ஆகச் சிறந்த நான்கு குழுக்களும் ஐரோப்பிய கிண்ணப் பயணத்தைத் தொடரும். முதல் சுற்று ஆட்டங்களுடன் எட்டு குழுக்கள் போட்டியிலிருந்து வெளியேறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!