தப்பிப் பிழைத்த மெக்சிகோ

பாசடெனா: புதிதாக களம் கண்ட இரு மத்திய தற்காப்பு ஆட்டக் காரர்கள், வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தலைமைப் பயிற்றுவிப் பாளரான வின்ஃபிரட் ஷாஃபர் திடலிலிருந்து வெளியேற்றப்பட்டு பார்வையாளர் பகுதிக்கு அனுப்பப் பட்ட நிலையிலும் நேற்று அதி காலை மெக்சிகோவுடன் மோதிய ஜமைக்கா காற்பந்துக் குழு எதிர் அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. முதற்பாதி ஆட்டத்தில் மெக்சிகோவை திக்குமுக்காட வைத்த ஜமைக்கா அணிக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பெனால்டி வாய்ப்பை இரண்டாம் பாதி ஆட்டத்தில் தர மறுத்தார் பிரேசில் நாட்டு நடுவர்.

அந்த நிலையில் ஜமைக்கா அணிக்கு பெனால்டி கிடைத்திருந்தால் 0=1 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கும் நிலையிலிருந்த ஆட்டத்தை சமன் செய்து புதிய உத்வேகத்துடன் விளையாடியிருக் கும் என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், ஜமைக்கா வீரர்களின் அனுபவமின்மையை நன்கு பயன் படுத்திக்கொண்ட மெக்சிகோ அணி, ஆட்டத்தின் 18ஆம் நிமிடத்தில் முன்னாள் ரியால் மட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜாவியர் ஹெர்னாண்டெஸ் மூலம் முன்னிலை பெற்றது. ஆட்டத்தை விறுவிறுப்பாக தொடங்கிய ஜமைக்கா வீரர்கள் முதல் ஐந்து நிமிடத்திலேயே மெக்சிகோவுக்கு எதிராக கோல் போட்டிருக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!