கேரத் பேல்: இதுவே முடிவல்ல

லென்ஸ்: முற்பாதி ஆட்டத்தில் தமது கால்கள் மூலம் வந்த கோலால் தமது அணி முன்னிலை கண்டபோதும் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து அணி இரு கோல்களைப் போட்டு வாகை சூடியதால் தளர்ந்து போனார் வேல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேரத் பேல் (படம்). ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பேல் ‘ஃப்ரீ கிக்’ மூலம் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் கைகளால் தட்டி விட்டபோதும் பந்து வலைக்குள் புகுவதை அவரால் தடுக்க இயலவில்லை. ஆயினும், இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் ஹாட்சன் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே இரு மாற்று வீரர்களைக் களமிறக்கியது அந்த அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

56வது நிமிடத்தில் ஜேமி வார்டியும் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் டேனியல் ஸ்டரிஜும் கோலடிக்க, 2-1 என்ற கணக்கில் வெற்றியைப் பறித்து நான்கு புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முதல் இடத்திற்குத் தாவியது இங்கிலாந்து. இருப்பினும், இந்தத் தோல்வியே முடிவல்ல என்றும் அடுத்த ஆட்டத்தில் மீண்டெழுவோம் என்றும் நம்புகிறார் 26 வயதான பேல். “தொடர் இன்னும் முடிந்துவிடவில்லை. நாளை மறுநாள் திங்கட்கிழமை இரவு ரஷ்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் வலிமையுடன் களமிறங்குவோம்,” என்று உறுதியுடன் கூறினார் பேல். ஸ்லோவாக்கியாவிற்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 2-1 என வென்றிருந்த வேல்ஸ் மூன்று புள்ளிகளுடன் பட்டி யலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா