பிரான்சுக்கு காத்திருக்கும் பலப்பரிட்சை

பாரிஸ்: இவ்வாண்டின் யூரோ கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் அப்போட்டியின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் நாடானது. சுவிட்சர்லாந்து அணியுடன் நேற்று பின்னிரவு நடைபெற்ற ஆட்டம் கோல் ஏதுமின்றி அது சமநிலை கண்டபோதும் தனது 'ஏ' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ். ஆனால் இனிதான் அதற்குப் பலப்பரிட்சை காத்திருக்கிறது. தனது இரு முந்தைய ஆட்டங் களில் அல்பேனியா, ருமேனியா ஆகிய நாடுகளை வீழ்த்தவே பிரான்ஸ் அணி சற்று திக்குமுக் காடியது.

எனினும் சுவிட்சர்லாந்து அணி யுடனான ஆட்டம் சமநிலையில் முடிந்தபோதும் பிரான்ஸ் மோசமாக விளையாடியது என்று சொல்ல முடியாது. மாறாக, சுவிட்சர்லாந்து இம்முறை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற ஆட்டத்தின் வேகமும் குறையவே இல்லை. முன்னணி ஆட்டக்காரர்கள் பாயட், ஜிரூ போன்றோர் இல்லாமல் களம் இறங்கிய பிரஞ்சு அணிக்கு அதன் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் வீரர் பால் பொக்பா ஜொலித்தார். இருமுறை அவரது கோல் முயற்சி கோல் கம்பத்தில் பட்டது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே தாக்குதகல் களின் வேகத்தைக் குறைத்தன. பிரான்சுக்கு மாற்று ஆட்டக்காரராக வந்த பாயட்டின் ஒரு முயற்சியும் கோல் கம்பத்தில் பட்டு வெளியானது. இதில் கடைசி நிமிடத்தில் பிரஞ்சு ஆட்டக்காரர் பெனால்டி எல்லையில் தனது வீரர் ஒருவரைக் கீழே தள்ளியதாகக் கூறி பென்லாடி வாய்ப்பு கோரியது சுவிட்சர்லாந்து. ஆனால் அது நடுவரால் நிராகரிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு மத்தியில் பந்துக்காகப் போட்டியிடும் பிரஞ்சு ஆட்டக்காரர் பால் பொக்பா (வலமிருந்து நான்காவது). இந்த ஆட்டத்தில் பொக்பா சுவிட்சர்லாந்து அணியினரைத் தீண்டிக் கொண்டே இருந்தார். இந்த ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமநிலை யில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!