எதிர்பாரா தோல்வியால் உறைந்த ஸ்பெயின்

போர்டோ: குரோவே‌ஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. 2-=1 எனும் கோல் கணக்கில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தோல்வியைத் தழுவியபோதிலும், ஸ்பெயின் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் முதல் சுற்றின் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் 'பி' பிரிவின் முதல் இடத்தை ஸ்பெயினால் பிடிக்க இயலவில்லை. இரண்டாம் நிலையைப் பிடித் துள்ள ஸ்பெயினுக்குக் காலிறுதி சுற்றில் பலம் பொருந்திய இத்தாலி யைச் சந்திக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. அதுமட்டுமல்லாது, கடந்த 14 ஆட்டங்களில் தோல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் நெஞ்சை நிமர்த்தி வீர நடை போட்டுக் கொண்டிருந்த ஸ்பெயினுக்கு குரோவே‌ஷியா மறக்க முடியாப் பாடம் கற்பித்துள்ளது. வெற்றிக்குக் குறி வைத்து களமிறங்கிய ஸ்பெயின் ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை வகித்தது.

ஃபேபிரிகாஸ் வலை நோக்கி அனுப்பிய பந்தை குரோவே‌ஷிய தற்காப்பு ஆட்டக்காரர் நெருங் குவதற்குள் மின்னல் வேகத்தில் செயல்பட்ட மொராட்டா அதை கோலாக்கினார். தங்களைத் தடுத்து நிறுத்து வதற்கு யாருமில்லை என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த ஸ்பெயின் வீரர்களுக்கு இடை வேளைக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது சோதனைக் காலம் தொடங்கியது. விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் இடை வேளைக்காக தயாராகிக் கொண் டிருந்தபோது குரோவே‌ஷியாவின் பெரிசிச் அனுப்பிய பந்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் வலைக்குள் சேர்த்தார் களினிச். பிற்பாதி ஆட்டம் தொடங்கி யதை அடுத்து, குரோவே‌ஷியா ஆதிக்கம் செலுத்தி ஸ்பெயினை மிரட்டத் தொடங்கியது.

ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது புயல் வேகத்தில் தாக்குதல் நடத்தி வெற்றி கோலைப் போட்டது குரோவே‌ஷியா. பந்தை வலைக்குள் சேர்த்த பெரிசிச் (வலது) தமது சக ஆட்டக்காரர்களுடன் கொண்டாட விரைகிறார். குரோவே‌ஷியாவின் வெற்றி கோலைத் தடுக்கத் தவறிய ஸ்பெயின் கோல்காப்பாளர் டி கியாவின் (இடது) சோகம் நிறைந்த முகம் அவரது குழுவின் வேதனையைப் பிரதிபலித்தது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!