இரண்டாமிடத்தில் பும்ரா

துபாய்: ஸிம்பாப்வே சுற்றுப்பயணத் தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (படம்) அனைத்துலக டி20 கிரிக்கெட் தரவரிசையில் இரண் டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸிம்பாப்வேவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்த பும்ரா தரவரிசைப் பட்டியலில் ஆறு இடங்கள் தாவினார். முந்தைய பட்டியலில் மூன்றாமிடம் பிடித்து இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸிம்பாப்வே தொடரில் இடம்பெறாததால் நான்கு இடங்கள் பின்தங்கி ஏழாமிடத்திற்கு இறங்கினார்.

முதலிடத்தை வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி தக்கவைத்துக்கொண்டார். டி20 பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் இந்திய டெஸ்ட் அணித் தலைவர் விராத் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் ஆகியோர் அடுத்த இரு நிலை களில் உள்ளனர். அணிகளுக்கான தரவரிசையில் நியூசிலாந்தைவிட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்று 128 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது இந்தியா. வெஸ்ட் இண் டீஸ் மூன்றாம் நிலையில் உள்ளது.