யூரோ: வலிமையைப் பறைசாற்றிய ஜெர்மனி

பாரிஸ்: உலகக் கிண்ண வெற்றியாளராக இருந்தபோதும் நடப்பு யூரோ காற்பந்துத் தொடரின் பிரிவுச் சுற்று ஆட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்குச் செயல் படாத ஜெர்மனி, காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் தனது பலத்தை நிரூபித்தது. உலகத் தரநிலையில் நான்காம் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தன்னைவிட 20 இடங்கள் பின் தங்கியுள்ள ஸ்லோவாக்கியாவை 3=0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. ஆட்டம் தொடங்கி எட்டாவது நிமிடத்தில் அதிக தொலைவில் இருந்து பந்தை வலைக்குள் உதைத்து ஜெர்மனிக்கு முன் னிலை பெற்றுத் தந்தார் ஜெரோம் போட்டெங். பயர்ன் மியூனிக் குழு வீரரான இவர் அனைத்துலகப் போட்டிகளில் அடித்த முதல் கோல் இதுதான். 43வது நிமிடத்தில் மாரியோ கோமெஸ் கோலடிக்க உதவிய ஜூலியன் டிரேக்ஸ்லர், 63வது நிமிடத்தில் தமது கணக்கில் ஒரு கோலை சேர்த்தார்.

நசுங்கிய ஹங்கேரி

உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியத்திடம் 4=0 என்ற கோல் கணக்கில் மரண அடி வாங்கியது ஹங்கேரி. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் டோட்டன்ஹம் குழுவிற்காக ஆடி வரும் தற்காப்பு ஆட்டக்காரர் டோனி ஆல்டர்வெய்ரல்ட் 10வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். 79வது நிமிடத்தில் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் அனுப் பிய பந்தை அழகாக வலைக்குள் தள்ளினார் மாற்று ஆட்டக்காரர் மிச்சி பட்சுவாயி. எதிரணியின் தற்காப்பை லாவகமாக முறியடித்து அடுத்த நிமிடத்திலேயே அருமை யான கோல் ஒன்றை அடித்தார் ஹஸார்ட். ஆட்டத்தின் கடைசி நிமிடத் தில் யானிக் கரஸ்கோவின் கால்கள் மூலமாக வந்த கோலால் பெல்ஜியத்தின் கோல் எண் ணிக்கை நான்காக உயர்ந்தது.

தன்னம்பிக்கையுடன் பிரான்ஸ்

ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெனால்டியின் மூலம் முன்னி லையை விட்டுத் தந்தபோதும் கிரீஸ்மன் இரு கோல்களைப் போட்டு தொடரை ஏற்று நடத்தும் பிரான்ஸ் அணியைக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றினார். இந்த வெற்றியின்மூலம் தங்களால் கிண்ணம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிரான்ஸ் வீரர்களிடம் மீண்டும் அரும்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!