கோப்பா அமெரிக்கா: அதே எதிரி, அதே முடிவு

நியூஜெர்சி: உலகின் மிகப் பழமை யான காற்பந்துப் போட்டியான கோப்பா அமெரிக்கா தொடரில் வாகை சூடும் என எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினாவை 4-2 என பெனால்டி வாய்ப்புகளில் வீழ்த்திக் கிண்ணத்தைத் தக்க வைத்துக்கொண்டது சிலி.

கடந்த ஆண்டு நடந்த கோப்பா அமெரிக்கா தொடரிலும் இவ்விரு அணிகளே மோதின. இம்முறை போலவே சென்ற முறை யும் ஆட்ட நேரத்திலும் கூடுதல் அரைமணி நேர ஆட்டத்திலும் இரு அணிகளும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. அப்போதும் பெனால்டி வாய்ப்புகளில் 4-1 என வென்றிருந்தது சிலி.

2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் வாய்ப்பைத் தவறவிட்டு அர்ஜெண்டினாவின் கிண்ணக் கனவைத் தவிடு பொடியாக்கிய கோன்சாலோ ஹிகுவைன், இம்முறையும் மிக அரிதாகக் கிடைத்த, அதே சமயம் மிக எளிதான கோல் வாய்ப்பை வீணாக்கியது அர்ஜெண்டினா ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

ஒரே ஒரு வித்தியாசமும் அதிர்ச்சியும் என்னவெனில், கடந்த முறை பெனால்டியில் குறி தவறாது பந்தை வலைக்குள் தள்ளிய நட்சத்திர வீரரும் அர்ஜெண்டினா அணித்தலைவரு மான லயனல் மெஸ்ஸி இம்முறை பந்தை கோல் கம்பத்திற்கு மேல் உதைத்ததுதான்.

முன்னதாக, முதல் பாதியில் மார்செலோ டயஸ் (சிலி), மார்க் கோஸ் ரோஹோ (அர்ஜெண்டினா) ஆகியோரை நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றியதால் இரு அணிகளுமே பத்து வீரர் களுடன் விளையாட நேரிட்டது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பா அமெரிக்கா கிண்ணம் வென்ற மகிழ்ச்சியில் கிளாடியோ பிராவோ (கிண்ணத்தை உயர்த்தியிருப்பவர்) தலைமையிலான சிலி காற்பந்து அணி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!