விடைபெற்றார் மெஸ்ஸி

நியூஜெர்சி: அனைத்துலகக் காற் பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அர்ஜெண்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி. சிலி அணிக்கெதிரான கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோட்டைவிட்டதால் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிண் ணத்தைப் பறிகொடுத்தது அவரது அர்ஜெண்டினா அணி. "இது எனக்கானது அல்ல. தேசிய அணியுடனான எனது பயணம் முடிந்துவிட்டது. என்னால் முடிந்த அளவு உழைத்தும் வெற்றி யாளராக முடியாதது என்னைக் காயப்படுத்துகிறது," என்றார் மெஸ்ஸி.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நான்கு முறை முக்கிய தொடர் களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் அர்ஜெண்டினாவால் கிண்ணம் வெல்ல இயலவில்லை. இதன்மூலம் கடந்த 23 ஆண்டு களாக அதன் கிண்ண ஏக்கம் நீடிக்கிறது. பார்சிலோனா குழு சார்பில் எட்டு முறை ஸ்பானிய லீக் காற்பந்துப் பட்டத்தையும் நான்கு முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் கைப்பற்றியுள்ள மெஸ்ஸி, 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதே அனைத்துலகப் போட்டிகளில் அவர் பெற்ற ஒரே கௌரவம்.

2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் கிண் ணத்தை இழந்த அர்ஜெண்டினா, அதற்கு அடுத்த இரு ஆண்டு களிலும் பெனால்டி வாய்ப்புகளில் கோப்பா அமெரிக்கா கிண்ணத் தைச் சிலியிடம் பறிகொடுத்தது. 2007 கோப்பா அமெரிக்கா தொட ரின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் தோற்ற அர்ஜெண்டினா அணியிலும் மெஸ்ஸி இடம்பெற்று இருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!