தோல்வியின் எதிரொலி: டெல் போஸ்க் விலகல்

மட்ரிட்: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியிலிருந்து ஸ்பெயின் வெளியேறியதை அடுத்து அதன் பயிற்றுவிப்பாளராக இருந்த விசென்டே டெல் போஸ்க் பதவி விலகியுள்ளார். 2010ஆம் ஆண்டில் டெல் போஸ்க்கின் தலைமையின்கீழ் ஸ்பெயின் உலகக் கிண்ணத்தையும் 2012ஆம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ணத்தையும் வென்றது. ஸ்பெயினின் பயிற்று விப்பாளர் என்கிற முறையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த டெல் போஸ்க்கின் வெற்றிப் பயணம் இந்த ஆண்டின் ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியில் ஒரு முடிவுக்கு வந்தது. 'நாக் அவுட்' சுற்றுக்குத் தகுதி பெற்ற ஸ்பெயின், 2-0 எனும் கோல் கணக்கில் இத்தாலியிடம் தோல்வி அடைந்தது.

புயல் வேகத்துடன் சீறிப் பாய்ந்த இத்தாலியைத் தடுத்து நிறுத்தும் வியூகத்தை வகுக்க முடியாமல் டெல் போஸ்க் தவித்ததுதான் மிச்சம். இந்தப் போட்டியில் ஸ்பெயின் வாகை சூடியிருந்தாலும் போட்டி முடிந்ததும் பதவி விலகப்போவதாக ஏற்கெனவே தாம் திட்டமிட்டிருந்ததாக டெல் போஸ்க் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் முதல் சுற்றில் தோல்வி கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறியது. நடப்பு வெற்றியாளராக இருந்தபோதும் முதல் சுற்றிலேயே ஸ்பெயின் வெளியேறியதால் டெல் போஸ்க் பதவி விலகவேண்டும் என்று அப்போதே அதிருப்தி குரல்கள் எழுந்தன. ஆனாலும் பதவியில் தொடர்ந்து இருந்த டெல் போஸ்க் இம்முறை பதவி விலகியுள்ளார்.

பதவி விலகிய டெல் போஸ்க். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!