12 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் நான்கு வயது சிறுவன்

புதுடெல்லி: பொம்மைகளோடும் பெற்றோர்கள், நண்பர்களோடும் விளையாடும் சிறுவர்கள் மத்தியில் நான்கு வயது பையன் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து உள்ளது அனைவரையும் ஆச்சர் யத்தில் ஆழ்த்தியுள்ளது. 12 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் குழுவில் தனது பள்ளியை பிரதிநிதித்து விளையாட ஷ்யான் ஜமால் என்ற சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான்.

ஷ்யானின் வயதை ஒத்த பிள்ளைகள் பொம்மைப் படங்களை பார்ப்பதில் ஆர்வமாக இருக்கும் போது, ஷ்யாமோ தொலைக்காட்சி களில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டிகளை கவனமாகப் பார்ப் பான் என்றார் சிறுவனின் தந்தை. ஷ்யானின் தந்தையும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாடுவது குறிப்பிடத்தக்கது. ஷ்யானின் திறமையைப் பார்த்த கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களில் முக்கியமான ஒருவரான உத்தம் பட்டாச்சார்யா, தனது பயிலகத்தில் அவனுக்கு பயிற்சி அளிப்பதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஷ்யானின் ஆர்வத்தை அறிந்த அவர், அவனுக்கு இப்போது குறிப் பிட்ட இடைவெளியில் பயிற்சி அளித்தும் வருகிறார். "ஷ்யான் அதிக திறன் உடைய சிறுவன். வெறுமனே பந்தடிக்காமல் கிரிக்கெட் முறைப்படி சிறப்பாக பந்தடிக்கிறான். "சுமார் 25 ஆண்டுகள் கிரிக் கெட் உலகை ஆண்ட சச்சின் டெண்டுல்கர்கூட, இந்தச் சிறு வயதில் கிரிக்கெட் விளை யாட்டைப் பற்றி இவ்வளவு அறிந்திருப்பாரா என்று தெரிய வில்லை," என்றார் அவர். ஷ்யான் ஜமால் இந்திய அணிக்காக விளையாட வேண் டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!