31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் கோலாகலத் தொடக்கம்

ரியோ டி ஜெனிரோ: உலகின் ஆகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி களின் தொடக்க விழா பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை 7 மணி முதல் மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. இம்மாதம் 21ஆம் தேதி வரை 17 நாட்கள் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடு களைச் சேர்ந்த 11,000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 306 பிரிவு களில் போட்டிகள் இடம்பெறு கின்றன.

கிட்டத்தட்ட 78,000 ரசிகர்கள் மத்தியில் நான்கு மணி நேரமாக நடந்தேறிய தொடக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பிரேசில் காற்பந்து சகாப்தம் பெலேவுக்கு அந்த வாய்ப்பு தரப் பட்டபோதும் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் வர முடிய வில்லை. இதனால், முன்னாள் பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ் வெற்றி யாளர் குஸ்தாவோ குயர்ட்டன் ஒலிம்பிக் சுடரை ஏந்தி வர, அதைப் பெற்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார் பிரேசிலின் முன்னாள் மெரத்தான் ஓட்ட வீரர் வேண்டர்லி டி லிமா. இவர் 2004 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

பிரேசிலின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் எடுத்துரைக்கும் அங்கங்கள் இடம்பெற்றன. அமே சான் மழைக்காடுகள் சூழ அமைந் திருப்பதால்தானோ என்னவோ இம்முறை சுற்றுச்சூழல் பாதுகாப் பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதை வலியுறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பிரேசிலின் பாரம்பரிய 'சம்பா' நடனத்துடன் தொடங்கிய ஒலிம்பிக் தொடக்க விழா இம்முறை முற்றிலும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது. பருவநிலை மாற்றம் பல இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மரங்களையும் இயற்கை வளங்களையும் காத்து மனிதகுலத்தையும் இயற்கையையும் காப்பாற்றுவோம் என்பதை உலகிற்கே உரத்துச் சொல்லும் வகையில் தொடக்க விழா அங்கங்கள் இருந்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!