தனிநபர் கலப்பு பாணி நீச்சலில் ஹங்கேரிய வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்

ரியோ டி ஜெனிரோ: பெண்களுக்கான கலப்பு பாணி 400 மீட்டர் தூர நீச்சல் போட்டியில் ஹங்கேரியைச் சேர்ந்த கட்டின்கா ஹோஸ்ஸு தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு இந்த மாது எடுத்துக்கொண்ட நேரம் 4 நிமிடம் 26.36 விநாடிகள். 200 மீட்டர் கலப்பு பாணி நீச்சல் போட்டியிலும் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ள இவர், தான் பங்கேற்கும் நான்காவது ஒலிம்பிக் போட்டியில்தான் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"எனது வெற்றி ஒரு நீண்ட நெடும் பயணம். இன்று நான் பதக்கம் வெல்லவில்லை என்றாலும் ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டேன் என்ற நிலையில், நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்," என்றார். இவரின் இந்த வெற்றி சீன நீச்சல் வீராங்கனை யி ‌ஷிவென் ஏற்படுத்திய உலக சாதனை நேரமான 4 நிமிடம் 28.43 விநாடியை முறியடித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!