யோகேஷ்வரின் வெண்கலம் வெள்ளியாக மாறியது

புதுடெல்லி: 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் பெசிக் குடுக்கோவ் ஊக்க மருந்து பயன்படுத்தியது நிரூபணமாகி உள்ளதால் அந்தப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் யோகேஷ்வர் தத்துக்கு அந்த வெள்ளிப் பதக்கம் வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பை அனைத்துலக மல்யுத்த சங்கமும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றமும் அறிவிக்கும். குடுக்கோவ் 2013ஆம் ஆண் டில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. இவ்வாண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் யோகேஷ்வர் தத் 66 கிலோ பிரிவில் பங்கேற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிப் பதக்கத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட யோகேஷ்வர் அப்பதக்கத்தை தமது நாட்டவருக்கு அர்ப்பணித்து உள்ளார். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!