ரூனிக்கு உத்தரவிடும் தகுதி எனக்கில்லை - அலர்டைஸ்

டிர்னாவா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் சிலோவாக் கியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து ஆட்டத்தின் கடைசி வினாடியில் கோல் போட்டு வெற்றி பெற்றது. இதன் விளைவாக இங்கிலாந்தின் நிர்வாகி என்கிற முறையில் தமது முதல் ஆட்டத்தில் வெற்றியைச் சுவைத்துள்ளார் சேம் அலர்டைஸ். இங்கிலாந்தின் நிர்வாகியாக இருக்கும் அலர்டைஸ், திடலில் எந்தப் பகுதியில் விளையாடுவது என்பது குறித்து ரூனிக்கு உத்தரவிட தமக்குப் போதுமான அனுபவமில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"சிலோவாக்கியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரூனி தமது விருப்பப்படி எங்கு விளையாட வேண்டுமோ அங்கு விளையாடினார். என்னால் ரூனியைத் தடுக்க முடியாது. அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளில் என்னைவிட ரூனிக்குத்தான் அதிக அனுபவம் உள்ளது. மாறாக அவர் விரும்பி விளையாடும் பகுதியில் நன்றாக விளையாடுகிறாரா, சிறப்பாக பங்காற்றுகிறாரா என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்கலாம்.

"சிலோவாக்கியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் தாக்குதலில் ஈடுபடவில்லை. ஆனாலும் அவரது ஒட்டுமொத்த செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது," என்றார் அலர்டைஸ். ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் சிலோவாக்கியாவின் மார்ட்டின் ஸ்கர்டல் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளி யேற்றப்பட்டார். இருப்பினும், சிலோவாக்கி யாவின் பிடிவாதத் தற்காப்பை முறியடித்து கோல் போட முடியாமல் இங்கிலாந்து தவித்தது.

ஆட்டம் சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது. ஆட்டத்தின் கடைசி வினாடியில் ஆடம் லலானா இங்கிலாந்தின் வெற்றி கோலைப் போட்டார். இங்கிலாந்தின் அடுத்த தகுதிச் சுற்று ஆட்டம் அடுத்த மாதம் 8ஆம் தேதி வெம்பிலி விளையாட்டரங்கத்தில் மால்ட்டாவுக்கு எதிராக நடைபெறுகிறது. மற்றோர் ஆட்டத்தில் ஜெர்மனி 3-0 எனும் கோல் கணக்கில் நார்வேயைப் பந்தாடியது.

ஜெர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் மியூலர் இரண்டு கோல்களும் ஜோஷ்வா கிம்மிச் ஒரு கோலும் போட்டனர். மற்றோர் ஆட்டத்தில் மால்ட்டாவை 5-1 எனும் கோல் கணக்கில் ஸ்காட்லாந்து புரட்டி எடுத்தது. இந்த ஆட்டத்தில் மால்ட்டாவின் இரண்டு ஆட்டக் காரர்களுக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் வட அயர்லாந்து கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது.

பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சிலோவாக்கிய வீரருடன் போராடும் ரூனி (இடது). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!