ஸ்பர்சை கரைசேர்த்த கேன்

லண்டன்: இதுவரை ஐந்து போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற் பந்துக் குழுவைப் பொறுத்தமட்டில் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் அதிர்ஷ்டகர மானதாகவே இருந்து வந்துள்ளது. முந்தைய போட்டிகளில் மூன் றில் வெற்றி, ஒன்றில் சமநிலை கண்ட ஸ்பர்ஸ் குழு நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் சண்டர்லேண்ட் குழுவை எதிர் கொண்டது.

ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் வலைக்கு மிக அருகே எதிரணி யினர் தற்காப்பில் கோட்டைவிட, மிக எளிதாகப் பந்தை வலைக்குள் தள்ளி ஸ்பர்ஸ் குழுவை முன் னிலை பெறச் செய்தார் கேன். சண்டர்லேண்ட் குழுவைப் பொறுத்தவரை அதன் கோல்காப் பாளர் ஜோர்டன் பிக்ஃபர்ட் மிக அற்புதமாகச் செயல்பட்டார். முதல் பாதியில் மட்டும் ஸ்பர்ஸ் வீரர் களின் 19 கோல் முயற்சிகளை அவர் முறியடித்தார். ஆட்டத்தில் வேறு கோல் ஏதும் விழாததால் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு வெற்றி கண்டது. இதையடுத்து, 11 புள்ளி களுடன் அக்குழு பட்டியலின் மூன்றாமிடத்திற்குத் தாவியது. மற்றோர் ஆட்டத்தில், கிரிஸ்டல் பேலஸ் 4-=1 என்ற கோல் கணக் கில் ஸ்டோக் சிட்டியை வென்றது. பிற ஆட்டங்களில் எவர்ட்டன் 3-1 என மிடில்ஸ்புரோவையும் சௌத் தாம்ப்டன் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் சுவான்சி சிட்டி யையும் தோற்கடித்தன.

சண்டர்லேண்ட் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் விழுந்த ஒரே கோலை அடிக்கும் ஸ்பர்ஸ் வீரர் ஹேரி கேன் (எண் 10). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!