தெம்பனிசின் அரையிறுதி கனவு கலைந்தது

ஆசியக் காற்பந்து சம்மேளனக் கிண்ணப் போட்டியின் அரையிறு திக்குத் தகுதி பெற சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு தவறிவிட்டது. நேற்று முன்தினம் ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற காலிறுதிச் சுற்றுக் கான இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் பெங்களூரு அணியுடன் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது. ஏற்கெனவே பெங்களூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தெம்ப னிஸ் 1-0 கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்ததால் ஒட்டுமொத்த கோல் அடிப் படையில் தெம்பனிஸ் தோல்வி யைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது.

நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் தெம்பனிஸ் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றிருந்தாலும்கூட ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென் றிருக்கும்.

கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை தெம்பனிஸ் ஆட்டக்காரர்கள் கோட்டைவிட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. “கோல் போடும் வாய்ப்புகளை நழுவவிட்டதால் தோல்வி அடைந்தோம். நட்சத்திர வீரர் பென்னண்ட் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. நாங்கள் எவ்வளவு முயன்றும் கோல் போட முடியாமல் போனது,” என்று ஏமாற்றம் தெரிவித்தார் தெம்பனிஸ் பயிற்றுவிப்பாளர் அக்பர் நவாஸ்.

பெங்களூரு குழுவின் பயிற்றுவிப்பாளர் அல்பேட்டோ ரோக்கா தமது ஆட்டக்காரர்களை வெகுவாகப் பாராட்டினார். “முதல் ஆட்டத்தைவிட இரண்டாவது ஆட்டத்தில்தான் நாங்கள் கூடுதல் கோல் வாய்ப்புகளை உருவாக்கினோம் என்று நான் நினைக்கிறேன். ஆட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்,” என்றார் அவர். அரையிறுதியில், நடப்பு வெற்றியாளரான மலேசியாவின் ஜோகூர் டாருல் தக்சிம் அணியை பெங்களூரு சந்திக்கிறது.

தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் இர்வான் ஷா (வலது) வலை நோக்கி அனுப்பும் பந்தைத் தடுத்து நிறுத்தும் பெங்களூரு அணியின் கோல்காப்பாளர் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா