வாகை சூடிய அட்லெட்டிக்கோ மட்ரிட்

மட்ரிட்: டெப்போர்ட்டிவோ லா கொருனாவுக்கு எதிரான ஸ்பானிய லீக் ஆட்டத்தை அட்லெட்டிக்கோ மட்ரிட் 1=0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது. டெப்போர்டிவோவின் ஃபேகல் ஃபயிர் இடைவேளைக்கு முன்பு சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் அக்குழு பிற்பாதி ஆட்டத்தை வெறும் 10 ஆட்டக்காரர்களுடன் தொடர்ந்தது.

கோல் போட பல வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை அட்லெட்டிக்கோ தவறவிட்டது. இருப்பினும், ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தபோது அன்டோய்ன் கிரிஸ்மன் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இந்த வெற்றி மூலம் ஸ்பானிய லீக் பட்டியலில் அட்லெட்டிக்கோ மட்ரிட் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. லீக் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கும் ரியால் மட்ரிட்டைவிட அது இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை