வாட்ஃபர்ட்டைத் தோற்கடித்த பர்ன்லி

பர்ன்லி: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் பர்ன்லி குழு வாட்ஃபர்ட்டை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடிய பர்ன்லி இப்பருவத்துக்கான அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கு முன்பு லிவர் பூலுக்கு எதிரான ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பர்ன்லி வெற்றி பெற்று அதன் முதல் வெற்றியைப் பதிவு செய் திருந்தது. இரண்டாம் நிலை லீக்கில் போட்டியிடும் டார்பி கௌண்ட்டி யிடமிருந்து 10 மில்லியன் பவுண்ட் செலவில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட அயர்லாந்து வீரர் ஜெஃப் ஹென்ரிக் பர்ன் லிக்காகத் தமது முதல் கோலை ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் போட்டார்.

இடைவேளையின்போது பர்ன்லி 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களிலேயே பர்ன்லி அதன் வெற்றியை உறுதி செய்தது. பர்ன்லியின் மைக்கல் கீன் தலையால் முட்டிய பந்து வலைக்குள் புகுந்தது. தமது வீரர்களின் செயல்பாட்டை பர்ன்லி நிர்வாகி டைச் பாராட்டினார்.

பந்து வலைக்குள் செல்வதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்க்கும் வாட்ஃபர்ட் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஃப்‌ரீ கிக்’ வாய்ப்பு மூலம் கோலை நோக்கி பந்தை அனுப்பும் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை

ஸ்பெயினின் சாவ்ல் நிகேஸுடன் பொருதும் ருமேனியாவின் ஃபுளோரினல் கோமன் (மஞ்சள் நிற சீருடையில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

கோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து