அலர்டைஸ் பதவி நீக்கம்

லண்டன்: சேம் அலர்டைஸ் இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் நிர்வாகி பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களின் விளையாட்டாளர் கள் குழு மாறுவது தொடர்பான விதிமுறைகளை முறியடிப்பது குறித்து முதலீட்டாளர்களைப் போல் வந்த தி டெய்லி டெலிகிராப் செய்தியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கினார். செய்தியாளர்கள் என்று தெரி யாமல் ஆலோசனை வழங்கியதால் வசமாக சிக்கிக்கொண்ட அலர் டைஸ் இங்கிலாந்தின் நிர்வாகியாக பதவியேற்ற 67 நாட்களில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து காற்பந்து இணை யத்தளம் வாயிலாக அலர்டைஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடந்த ஜூலை மாதம் நிர்வாகி யாக பதவியேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது பதவியில் நீக்கப்படுவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. “எனது இந்தச் செயலுக்காக கிளார்க், மார்ட்டின் கிளென் ஆகியோரிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டுக் கொண் டேன்,” என்றார். இச்சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட தகவல்களை காற் பந்து சங்கத்திடம் கொடுக்கவும் அப்பத்திரிகை ஒப்புக்கொண்டு ள்ளது. இதற்கிடையே, அலர்டைஸ் போல் மேலும் எட்டு பிரிமியர் லீக் நிர்வாகிகளும் இதுபோன்று தவ றான முறையில் பணம் பெற்றதாக பிரிட்டன் செய்தித்தாள் குற்றம் சாட்டி உள்ளது. அவர்களில் முன்னாள், தற்போதைய நிர்வா கிகளும் அடங்குவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யர்கன் கிளோப். படம்: இபிஏ

13 Nov 2019

யர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே