பர்ன்லியின் வெற்றியைப் பறித்த சர்ச்சைக்குரிய கோல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் ஆர்சன லிடம் வெற்றியைப் பறி கொடுத் தது பர்ன்லி. இறுதி நிமிடம் வரை சமநிலையில் இருந்த ஆட்டத்தில் காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது ஆர்சனல் வெற்றி பெற்றது. அலெக்ஸ் சேம்பர்லைனை நோக்கி தியோ வால்காட் தலையால் முட்டி கடத்திய பந்து கோல் வலைக்குள் புகுந்தது. ஆனால் பந்து கொசியல்னியின் கையில் பட்டு கோல் வலைக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய அந்த கோலால் பர்ன்லி 0-1 என்ற கோல் எண் ணிக்கையில் வெற்றியைப் பறி கொடுத்தது.

ஆனால், பர்ன்லி குழுவின் சிறப்பான தற்காப்பு ஆட்டக்காரர் கள் 93வது நிமிடம் வரை ஆர்சனலை கோல் போடவிடாமல் திணறடித்தனர். ஆனால் அவர்களது இந்த போராட்டத்திற்கு எந்தப் பலனும் இல்லாத வகையில், அவர்கள் வெற்றியைப் பறிகொடுத்தது கொடுமையானது என்கிறார்கள் காற்பந்து ரசிகர்கள். இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து முதலில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியை நெருங்கியுள்ளது. ஆர்சனல் குழுவின் நிர்வாகி தனது குழுவினர் வெற்றி பெற்றது அதிர்ஷ்டவசமானது என்று கூறினார். பர்ன்லியின் நிர்வாகி சியன் டைச் ஆட்டத்தின்போது சர்ச்சைக்குரிய கோல் பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும் அதன்பிறகு பேசிய அவர், பந்து விளையாட்டாளரின் கையில் பட்டுச் சென்றது தெளிவாகத் தெரிந்தது என்றார்.

வெற்றியைக் கொண்டாடும் ஆர்சனலின் அலெக்ஸ் சேம்பர்லைன். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next