மேன்யூ, லிவர்பூல் ரசிகர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள மொரின்யோ வலியுறுத்து

லிவர்பூல்: ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நாளை மறுநாள் அதிகாலை மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் குழுக்களுக்கு இடையே நடக்கவிருக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தின்போது இரு குழுக்களின் ரசிகர்களும் ஒருவர் மற்ற வரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று மேன்யூ நிர்வாகி ஜோசே மொரின்யோ வலியுறுத்தியுள்ளார். கடந்த யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரில், காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் இவ்விரு குழுக்களும் மோதின. அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்டதால் இரு குழுக் களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது.

அந்தச் சுற்றில் லிவர்பூல் 3-1 என ஒட்டுமொத்த கோல் வித்தி யாசத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. ஆயினும், ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தின் போது லிவர்பூல் ரசிகர்கள் பட்டா சுகளைக் கொளுத்தி, இருக்கை களைத் தூக்கி எறிந்து ஒழுங் கீனமாக நடந்துகொண்டனர். அதுபோல, மேன்யூ ரசிகர்கள் படிக்கட்டுப் பகுதிகளில் தடுப்பு களை ஏற்படுத்தி தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். அத்துடன், இரு குழுக்களின் ரசிகர்களும் மோதலிலும் ஈடுபட் டனர். அதே போன்றதொரு அவமான கரமான செய்கைகள் மீண்டும் ஒருமுறை இடம்பெறக்கூடாது என்று மொரின்யோ கவலை தெரிவித்துள்ளார். "ரசிகர்களின் நடத்தை, இப்படி ஒரு மிகப் பெரிய காற்பந்துப் போட்டிக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டால் நான் மிகவும் வருத்தமடைவேன்," என்றார் மொரின்யோ.

'ரூனி இன்னும் சிறந்த வீரர்தான்'

இதற்கிடையே, அண்மைகாலமாக மோசமாக ஆடி வந்தாலும் மேன்யூ குழுத் தலைவர் வெய்ன் ரூனி இன்னும் கோலடிப்பதில் வல்லவ ராகத் திகழ்கிறார் என்றும் அவர் அணியில் இடம்பெற்றிருப்பது எதிரணிக்கு மிரட்டல்தான் என்றும் லிவர்பூல் நிர்வாகி யர்கன் க்ளோப் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாகக் காற்பந்து ஆடும்போது சறுக்கும்படியான இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படத் தான் செய்யும் என்றும் ஆனாலும் தன்னைப் பொறுத்தவரை ரூனி இன்னும் உலகத்தரமான ஆட்டக் காரராகத் திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!