சிட்டியைக் கவிழ்த்த மாட்டா

மான்செஸ்டர்: லீக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் காலிறுதிச் சுற்றுக்குள் மான்செஸ்டர் யுனை டெட், வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுக்கள் நுழைந்தன. ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டு அரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் யுவான் மாட்டா போட்ட ஒரே கோலால் யுனைடெட் குழு 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வென்றது. வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி யில் செல்சியிடம் 4-0 என மண்ணைக் கவ்விய யுனைடெட் இந்த ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டிய இக்கட்டில் இருந்தது.

அதேபோல, உலகின் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப் படும் பெப் கார்டியோலாவின் சிட்டி குழுவும் தான் ஆடிய கடைசி ஐந்து ஆட்டங்களில் வெற்றி ருசியையே அறியாததால் அந்தக் குழுவிற்கும் நேற்றைய ஆட்டம் முக்கியமானதாக அமைந் தது. முன்னணி ஆட்டக்காரர்களான ஸ்லாட்டன் இப்ராகிமோவிச்சும் பால் போக்பாவும் கோல் வாய்ப்பு களை வீணடித்தது யுனைடெட் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளித்தது. ஆயினும் 54ஆம் நிமிடத்தில் மாட்டாவின் கால்கள் மூலம் வந்த கோலால் அந்த ஏமாற்றம் மறைந்து ரசிகர்களின் முகங்களில் நம் பிக்கை தோன்றியது. இவ்வெற்றி யின்மூலம் கடந்த மாதம் இபிஎல் லில் 2-1 என்ற கணக்கில் சிட்டி யிடம் அடைந்த தோல்விக்கு யுனைடெட் வஞ்சம் தீர்த்துக் கொண்டது.