இந்தியா-இங்கிலாந்து தொடரில் புதிய தொழில்நுட்ப முறை

புதுடெல்லி: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிராக கடந்த 2011ஆம் ஆண்டு விளையாடியபோது டி.ஆர்.எஸ். முறை கடைப்பிடிக்கப்பட்டது. அப் போது டி.ஆர்.எஸ். முறையின் மீது இந்தியாவிற்குப் போதுமான திருப்பதி ஏற்படவில்லை. இதனால் இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளாக டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் டி.ஆர்.எஸ். முறையைப் பரி சோதனை முறையில் நடைமுறைப்படுத்த இந்தியா சம்மதம் தெரிவித்தது. இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வரும் 9ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். அறிமுகப்படுத்தப்படுகிறது.

டி.ஆர்.எஸ். முறை என்பது மைதான நடுவர் கொடுக்கும் அல்லது கொடுக்காத முடிவுகளை ஆராய்ந்து மறுதீர்ப்பு வழங்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும். இதில் மூன்று அம்சங்கள் பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு ஒரு பந்தில் பேட்ஸ்மேன் ஓட்டம் அடிக்க முயலும்போது பந்து பேடை தாக்கியது என்றால், பந்து வீச்சாளர்கள் எல்.பி.டபிள்யூ. ஆட்டமிழக்க மைதான நடுவரிடம் முறையிடுவார்கள். அப்போது நடுவர் விக்கெட் கொடுக்காவிடில் பந்து வீச்சு அணி ஆய்வுக்கு கோரிக்கை விடுப்பர். அப்போது 3வது நடுவரால் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப் படும்.

முதலில் ‘ஸ்னீக்கோ மீட்டர்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப் படும். இந்தத் தொழில் நுட்பத் தின்படி பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து விலகிச் சென்று ஆடுகளத்தில் ‘பிட்ச்’ ஆன பிறகு எதில் உரசுகிறதோ, அப்போது ‘ஸ்னீக்கோ மீட்ட’ரில் அதிர் வலைகள் ஏற்படும். அப்போது பந்து பேட்டில் பட்டபின் பேடில் பட்டதா அல்லது பேட்டில் படாமல் பேடை தொட்டதா என்பது தெரியவரும். இது தெளிவாகத் தெரிய வில்லை என்றால், ‘ஹாட்ஸ்பாட்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப் படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை