ஜூனியர் ஹாக்கி: ஸ்பெயினை இந்தியா வெற்றி கொண்டது

வெலன்சியா: நான்கு நாடுகள் கலந்துகொள்ளும் ஜூனியர் ஹாக்கி போட்டி வெலென்சியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணிக்காக பர்வீந்தர் சிங், நீலகண்ட சர்மா, அர்மான் குரே‌ஷி ஆகியோர் கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

ஐந்து நாடுகள் கலந்துகொள்ளும் பெண்களுக்கான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் பிரசல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி ஜெர்மனியிடம் 1-2 என்ற கோல்கணக்கில் போராடித் தோற்றது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணிக்காக எலிசா கிரேவ், ஜூலியா மெஃபர்ட் ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணியில் ஜோதிக் குப்தா ஒரு கோல் அடித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!