ஆசிய சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி : வெற்றிக் களிப்பில் இந்திய அணி

குவாந்தான்: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 3-2 என வீழ்த்திய இந்தியா பட்டத்தைக் கைப்பற்றியது. தொடக்கம் முதலே இருநாட்டு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். முதல் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா இரண்டு கோல்களை போட்டது. ருபீந்தர் பால் சிங்கும் அஃபான் யூசுப்பும் இந்தியாவுக்கான அந்த கோலை அடித்தனர். அதன்பிறகு 26வது நிமிடத்தில் பாகிஸ்தானின் அலீம் பிலால் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

பிற்பாதி ஆட்டத்தில் பாகிஸ் தான் வீரர் அலிஷான் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து இரு அணி களும் முன்னிலைப் பெற கடுமையாக போராடின. இறுதியில் 51வது நிமிடத்தில் நிகின் திம்மையா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு முன் னிலைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா ஆசிய சாம்பியன்ஸ் கிண்ணத்தை 2வது முறையாகக் கைப்பற்றியது. இதேபோல், நான்கு நாடுகள் பங்கேற்ற ஜூனியர் ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 5-2 என வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

ஆசிய சாம்பியின்ஸ் கிண்ணத்துடன் இந்திய ஹாக்கி அணியினர். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!