ஜோசே மொரின்யோ மீது சுமத்தப்பட்ட ஒழுங்கீனக் குற்றச்சாட்டு

லண்டன்: வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் தமது குழு 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டதை அடுத்து விரக்தியில் தண்ணீர் போத்தலை உதைத்த மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்யோ மீது ஒழுங்கீனக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் தெரிவித்தது. அந்த ஆட்டத்தில் மொரின்யோவுக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டினார்.

இதன் விளைவாக நிர்வாகிகளுக்கான இடத்தில் அமர மொரின்யோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரசிகர்கள் உநட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அவர் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த அக்டோபர் மாம் 29ஆம் தேதியன்று பர்ன்லிக்கு எதிரான ஆட்டத்திலும் மொரின்யோவுக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ஓர் ஆட்டத் தடையும் 8,000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!