கோல்கத்தாவுக்கு எதிராகப் போராடி சமநிலை கண்ட புனே

கோல்கத்தா: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் கோல்கத்தாவும் புனேயும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டுள்ளன. கோல்கத்தாவில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெட்டிக்கோ டி கோல்கத்தாவும் புனே சிட்டியும் மோதின. களத்தில் ஏறக்குறைய சரிசம ஆதிக்கத்தைச் செலுத்திய இவ்விரு அணிகளாலும் இறுதி வரை பந்தை வலைக்குள் சேர்க்க முடியாமல் போனது. இன்னும் இரு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மும்பை (22 புள்ளிகள்), டெல்லி (20 புள்ளிகள்), கோல்கத்தா (20 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்று விட்டன. அரையிறுதிக்குத் தகுதி பெற கவுகாத்தியும் கேரள அணியும் இன்று மோதும்.

புனே வீரர் முகம்மது சிசோக்கோவுடன் (வலது) பந்துக்காகப் போராடும் கோல்கத்தா வீரர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா