வெஸ்ட் பிரோமை சாய்த்த மேன்யூ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு 2-0 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் பிரோம்விச் குழுவைத் தோற்கடித்துள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுனைடெட்டின் இரண்டு கோல்களையும் ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச் போட்டார். ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களில் யுனைடெட்டின் முதல் கோல் புகுந்தது. லிங்கார்ட் அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி இப்ராஹிமோவிச் கோல் போட்டார். அதனைத் தொடர்ந்து, ஆதிக்கம் செலுத்திய யுனைடெட் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வெஸ்ட் பிரோம் அணியைத் திணற வைத்தது.

இடைவேளையின்போது யுனைடெட் 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்திலும் யுனைடெட்டின் கையோங்கியது. ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் இப்ராஹிமோவிச் மீண்டும் கோல் போட்டார். அவர் வலை நோக்கி அனுப்பிய பந்து வெஸ்ட் பிரோம் தற்காப்பு ஆட்டக்காரர் கிரேக் டோசன் மீது பட்டு வலைக்குள் சென்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து பத்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வியைச் சந்திக்காமல் இருக்கிறது.

ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களிலேயே கோல் போட்ட இப்ராஹிமோவிச் (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!